தாஜ் ஹோட்டலில்.. கோலாகலமாக நடைபெற்ற காஜல் அகர்வால் திருமணம்.. மகாராணி போல ஜொலிக்கிறாரே!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகம் என கலக்கி வந்த நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் பிரம்மாண்ட செட் அமைத்து நடிகை காஜல் அகர்வால் திருமணம் களை கட்டியது.

நெருங்கிய சொந்தங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என மொத்தமே 50 பேருக்கு மட்டுமே அனுமதியாம்.

இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட்

இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட்

தளபதி விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் படங்களிலும் தல அஜித்துடன் விவேகம் படத்திலும், நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடித்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி படமும் சூப்பர் ஹிட் ஆனது. பழனி படத்தில் அறிமுகம் ஆனதில் இருந்தே தமிழ் இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் ஹீரோயினாக இருந்து வருகிறார்.

மும்பை தொழிலதிபர்

மும்பை தொழிலதிபர்

மும்பையில் பிறந்து வளர்ந்த காஜல் அகர்வால், பாலிவுட் படத்தில் அறிமுகமானார். பின்னர் டோலிவுட்டில் அடியெடுத்து வைத்த அவர், கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார். இந்தியன் 2, ஹே சினாமிகா படத்தில் நடித்து வரும் அவர் தற்போது மும்பை தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவுடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்தியளவில் டிரெண்டிங்

இந்தியளவில் டிரெண்டிங்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் பான் இந்திய நடிகையான காஜல் அகர்வாலின் திருமண வைபவம் #kajalaggarwalWedding என இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட்டில் ஏகப்பட்ட சோகமான விஷயங்கள் டிரெண்டான நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சந்தோஷமான திருமணம் டிரெண்டாகி வருவது பாசிட்டிவ் வைப்ரேஷனை கொடுத்துள்ளது.

தாஜ் ஹோட்டலில்

தாஜ் ஹோட்டலில்

மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிட்சிலு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மணமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட கொலு மண்டபத்தின் அட்டகாச புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

காஜல் அகர்வால் திருமணம்

காஜல் அகர்வால் திருமணம்

அலங்கரிக்கப்பட்ட அந்த கொலு மண்டபத்தில் மணமக்கள் இருவரும் நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.. மெஹந்தி, சங்கீத் என உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடிய காஜல் அகர்வால் தனது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததை மனதார ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மகாராணி போல

மகாராணி போல

நடிகை காஜல் அகர்வால் திருமண உடையில் ஒரு மகாராணி போல ஆடை அணிகளுடன் மின்னுவதை பார்த்த இந்திய சினிமா ரசிகர்கள், அவரது பேரழகை வர்ணித்து வருகின்றனர். 35 வயதாகும் நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனக் கனவுகளையும் நொறுக்கி விட்டதாகவும் மீம்களும் பறந்து வருகின்றன.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

நடிகை கீர்த்தி சுரேஷ், தமன்னா, சோனு சூட் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் நடிகை காஜல் அகர்வாலின் திருமணத்தை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் திருமண செய்தியும், வாழ்த்து மழைகளும் தான் நிறைந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்பும் தனது நடிப்பை தொடர்வேன் என காஜல் முன்னதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X