கையில் குழந்தையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்.. அந்த நடிகையும் போயிருக்காங்க!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால் திருமணம் முடிந்து கர்ப்பமான நிலையில், சினிமாவில் இருந்து விலகி விட்டார் காஜல் அகர்வால் என பேச்சுக்கள் அடிபட்டன.

ஆனால், உடனடியாக வொர்க்கவுட், குதிரை ஏற்றம் எல்லாம் செய்து மீண்டும் ஆரம்பித்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலே இணைந்து விட்டார்.

திருப்பதியில் காஜல் அகர்வால்

திருப்பதியில் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து சாமி தரிசனம் செய்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அந்த வீடியோவை பார்த்த காஜல் அகர்வால் ரசிகர்கள், அவர் கையில் இருந்த அவரது குழந்தையையும் கவனித்தனர்.

குழந்தையுடன் தரிசனம்

குழந்தையுடன் தரிசனம்

கொரோனா லாக்டவுன் நேரத்தில் திடீரென தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவரை பிரம்மாண்டமான முறையில் ராயல் வெட்டிங் செய்து கொண்டார் காஜல் அகர்வால். இருவருக்கும் உடனடியாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தார் காஜல் அகர்வால். தற்போது திருப்பதிக்கு மகனுடன் வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்தியன் 2 ஷூட்டிங் அங்கு தான்

இந்தியன் 2 ஷூட்டிங் அங்கு தான்

ஆந்திராவின் திருப்பதி மற்றும் கடப்பாவில் உள்ள மலைப் பகுதிகளில் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் திருப்பதியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

பட்டாஸ் ஹீரோயினும்

பட்டாஸ் ஹீரோயினும்

நடிகை காஜல் அகர்வால் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரின் பிர்சடாவும் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்துள்ள வீடியோக்கள் வெளியாகி உள்ளன. வாரிசு படத்திலேயே இவர் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X