கல்யாணம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. வேற லெவலில் பேச்சுலர் பார்ட்டியை கொண்டாடிய காஜல் அகர்வால்!

சென்னை: இந்த மாத இறுதியில் திருமணம் நடைபெற உள்ள அறிவிப்பை நடிகை காஜல் அகர்வால் அறிவித்த நிலையில், அவரது பேச்சுலர் பார்ட்டி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

35 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் ஒரு வழியாக தனது திருமணத்திற்கு தயார் ஆகி விட்டார்.

2004ம் ஆண்டு வெளியான க்யூன் ஹோ கயா நா எனும் இந்தி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால்.

பஞ்சாபி பொண்ணு

பஞ்சாபி பொண்ணு

டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வந்த வினய் அகர்வால் மற்றும் அவரது மனைவி சுமன் அகர்வாலுக்கு மகளாக 1985ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மும்பையில் பிறந்தவர் காஜல் அகர்வால். பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்த இவர், இந்தி படத்தில் அறிமுகம் ஆனாலும், அங்கு பெரிய வாய்ப்புகள் வராமல் இருந்த நிலையில், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.

பரத்துக்கு ஜோடியாக

பரத்துக்கு ஜோடியாக

2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லக்‌ஷ்மி கல்யாணம், சந்தாமாமா, பொருடு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு பரத்துக்கு ஜோடியாக பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், சரோஜா, மோதி விளையாடு, பொம்மலாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

மகதீரா

மகதீரா

ராஜமெளலியின் மகதீரா படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியை நடிகை காஜல் அகர்வால் பெற்றார். தொடர்ந்து ஆர்யா 2, ஓம் ஷாந்தி, டார்லிங் படத்தில் நடித்து வந்த அவர், தமிழில் நான் மகான் அல்ல படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். மாற்றான், ஆல் இன் ஆல் அழகு ராஜா என ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார்.

தளபதி விஜய்யுடன்

தளபதி விஜய்யுடன்

நடிகை காஜல் அகர்வால் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த துப்பாக்கி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. அதன் பின்னர் இருவரும் இணைந்து நடித்த ஜில்லா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்த மெர்சல் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கோமாளி

கோமாளி

இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒட்டுமொத்த சினிமா துறையும் முடங்கிப் போய் நிற்கிறது. கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். தமிழில் கடைசியாக அவர் நடித்த அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

கல்யாண அறிவிப்பு

கல்யாண அறிவிப்பு

இந்நிலையில், நேற்று திடீரென நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மும்பையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த திருமணம் வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறப் போகிறது.

பேச்சுலர் பார்ட்டி

பேச்சுலர் பார்ட்டி

காஜல் அகர்வாலின் திருமண அறிவிப்பை அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், தனது தங்கை நிஷா அகர்வாலுடன் நடத்திய பேச்சுலர் பார்ட்டி கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகை காஜல் அகர்வால் செம க்யூட்டாக அந்த போட்டோக்களில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்தியன் 2

இந்தியன் 2

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தியன் 2, ஹே சினாமிகா உள்ளிட்ட தமிழ் படங்களும், ஆச்சார்யா உள்ளிட்ட தெலுங்கு படமும் படப்பிடிப்பு முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிப்பேன்

தொடர்ந்து நடிப்பேன்

பெற்றோர்கள் ஆசைக்காக திருமணம் செய்து கொள்ளும் நிலையில், இவர் நடித்து வரும் படங்களின் எதிர்காலம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கும் பதிலாக, திருமணம் ஆனாலும், தனக்கு பிடித்த நடிப்புத் தொழிலை தொடர்வேன் என நடிகை காஜல் அகர்வால் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X