நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை..உங்கள் வாழ்வின் சிறந்த பகுதி..வாழ்த்திய பிரபல நடிகை !

சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பிரபல நடிகை இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,அனிருத், விஜய்சேதுபதி, ஷாருக்கான் என பலரும் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா

நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. இதையடுத்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தடபுடலான திருமணம் நடைபெற்றது.

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

இதையடுத்து, தாய்லாந்து ,பிரான்ஸ் என்று இரண்டு முறை ஹனிமூனை கொண்டாடிய இந்த தம்பதிகள் சினிமா ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என்று, விக்னேஷ் சிவனின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அம்மா & அப்பாவாகிவிட்டோம்

அம்மா & அப்பாவாகிவிட்டோம்

அதில், நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். நமது வேண்டுதல்களும், முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் உள்பட அனைத்தும் இணைந்து, நமக்கு 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டு இரண்டு குழந்தைகளின் பாதத்தை கையில் பிடித்திருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். திருமணமான நான்கே மாதத்திற்குள் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ள என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இந்நிலையில், நடிகை காஜல் அவர், இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நயனுக்கும், விக்கியும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெற்றோர்கள் கிளப்பிற்கு உங்களை வரவேற்கின்றேன். உங்கள் வாழ்வின் சிறந்த பகுதியாக இது இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X