அன்னைக்கி இனிச்சது, இன்னைக்கி கசக்குதா?: காஜல் ரசிகர்கள் கோபம்

By Siva

ஹைதராபாத்: சிரஞ்சீவி பட விவகாரம் தொடர்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கக்கூடும் என்று தான் முதலில் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

கொரடலா சிவா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜலை நடிக்க வைக்கவில்லையாம். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனை சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளார்களாம். ஐஸ்வர்யா ராய் ரொம்பவே யோசித்து யோசித்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். அதனால் அவர் சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பது சந்தேகமாக உள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க மறுத்தால் அனுஷ்கா அல்லது நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல்

காஜல்

சிரஞ்சீவி அரசியலுக்கு சென்றுவிட்டு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். 10 ஆண்டுகள் கழித்து அவர் கைதி எண் 150 படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நான் மாட்டேன், நீ மாட்டேன் என்று கூறி ஹீரோயின்கள் தெறித்து ஓடினார்கள். அப்பொழுது நண்பர் ராம் சரண் கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக காஜல் அகர்வால் சிரு ஜோடியாக நடித்தார். படம் ஹிட்டானதை பார்த்த நடிகைகள் அய்யோ நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டோமே என்று ஃபீல் செய்தனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

எந்த நடிகையும் நடிக்க மறுத்தபோது காஜல் தான் சிரஞ்சீவியுடன் நடித்தார். ஆனால் தற்போது அவரை ஹீரோயினாக்காமல் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கப் போகிறார்களாம். இதெல்லாம் நியாயமே இல்லை என்று காஜல் அகர்வாலின் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். காஜல் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் ரொம்பவே பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X