ஹேப்பி பர்த்டே காஜல்.. ஹாட் போட்டோக்களால் இணையத்தை எத்தனை முறை அலற விட்டுருக்காரு தெரியுமா?

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வாலின் 34வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ், தமன்னா, மெஹ்ரின் பிர்சடா, ரகுல் ப்ரீத் சிங் என பலரும் காஜல் அகர்வாலின் பர்த்டே காமன் டிபியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர்.

நடிகை சமந்தாவும் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் காஜல் அகர்வாலை புகழ்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

துப்பாக்கி, மாற்றான், விவேகம் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் இணையத்தை சூடேற்றும் படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி, செம கார்ஜியஸாக காஜல் அகர்வாலை வைத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ஹேப்பி பர்த்டே என வாழ்த்தி உள்ளார்.

குழந்தை மனசு

குழந்தை மனசு

இயக்குநர் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குழந்தை மனம் கொண்ட நடிகை காஜல் அகர்வால், இந்த லாக்டவுனில் நீச்சல் குளம் ஒன்றில், நீல நிற கவர்ச்சி உடையை அணிந்தபடி குளித்த புகைப்படங்களை வெளியிட்டு, இணையத்தின் சூட்டை கிளப்பி இருந்தார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

2020ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷா அகர்வால் மற்றும் அவரது மகன் மற்றும் குடும்பத்தினருடன் உல்லாசமாக பொழுதை கழித்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார். அதிலும், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் காஜல் அகர்வால் ஆட்டம் போட்ட போட்டோக்கள் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்தது.

வாட்டர் தெரபி

வாட்டர் தெரபி

ஆடையேதும் அணியாமல் நீச்சல் குளத்தில் படு ஹாட்டாக படுத்த படி, கண்களில் கூலர்ஸ் அணிந்து நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த வாட்டர் தெரபி போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் செம ஸ்பீடாக பரவியது குறிப்பிடத்தக்கது. வாட்டர் பேபியான காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட நீச்சல் குள போட்டோக்களை பதிவிட்டு இருக்கிறார்.

முன்னழகு தெரிய

முன்னழகு தெரிய

தென்னிந்தியாவின் டாப் நடிகையான காஜல் அகர்வால், கவர்ச்சி காட்டி நடிப்பதில் வேற லெவல் தான். பாடல்களில் அவர் போடும் கவர்ச்சி குத்தாட்டத்திற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் காத்துக் கிடக்கும். கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் பாடல் மாஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. முன்னழகு தெரிய அவர் பதிவிட்ட இந்த ஹாட் போட்டோ இணையத்தை இரக்கமே இல்லாமல் சூடேற்றியது குறிப்பிடத்தக்கது.

வெறும் சட்டையுடன்

வெறும் சட்டையுடன்

வெள்ளை சட்டை மற்றும் கருப்பு ஷூ அணிந்து படு கவர்ச்சியாக காஜல் அகர்வால் நடத்திய ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள், எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது மட்டுமின்றி, அவருக்கும் இருக்கும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் மொபைல் டிபிக்களாகவும் மாறி இருப்பது எல்லாம் தனிக் கதை.

மேடம் டுசாட்ஸ்

மேடம் டுசாட்ஸ்

தென்னிந்திய நடிகைகளிலேயே மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவருக்கு மட்டும் தான் மெழுகு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. பல பாலிவுட் பிரபலங்களுக்கு கிடைத்த இந்த கெளரவம் தமிழ் சினிமா நடிகையான காஜல் அகர்வாலுக்கும் கிடைத்ததற்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை சமீபத்தில் தெரிவித்து இருந்தனர்.

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க்

தளபதி விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா மற்றும் மெர்சல் படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால், கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார். சமீபத்தில், ஸ்ட்ராப்லெஸ் பிங்க் உடையில், இவர் எடுத்த போட்டோஷூட் போட்டோவை பார்த்த ரசிகர்கள், ரோஸ் மில்க் என்று வர்ணித்து ஜொள்ளு விட்டு இருந்தனர்.

Recommended Video

Kajal Agarwal Replaces Trisha Role | Acharya | Cirenjeeve
அடுத்தடுத்து

அடுத்தடுத்து

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான இந்தியன் 2 படத்தில் இவர் தான் லீடு ரோலில் நடித்து வருகிறார். குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் காஜல் அகர்வால், துல்கர் சல்மான் கானுடன் இணைந்து பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி வரும் ஹே சினாமிகா படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X