Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
லோகேஷ் கனகராஜ் பட ரீமேக்கில் காஜல் அகர்வால்...எந்த படம் தெரியுமா ?
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது என்றே சொல்லலாம்.

கோலிவுட்டின் சினிமா விதிகளை தகர்த்தெறிந்து, பாடல்களோ, ஹீரோயினோ இல்லாத படமாக கைதி படம் உருவாக்கப்பட்டது. ஹீரோயின் இல்லாமலும் படத்தை இயக்கி, பிரம்மாண்ட வெற்றி பெற வைக்க முடியும் என்பதை கைதி படம் நிரூபித்து காட்டியது.
த்ரில்லர் கைதியாக உருவாக்கப்பட்ட கைதி பிரம்மாண்ட வெற்றி அடைந்ததை அடுத்து, சமீபத்தில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் கார்த்தி நடித்த ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் முழுவதுமாக படக்குழு உருவாக்கப்பட்ட பிறகே, நடிகர் - நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
குழந்தைங்க
போடுற
டிரஸ்சைவிட
சின்னதா
இருக்கே…
பார்வதி
நாயரின்
சூடேற்றும்
புகைப்படம்
!
ஒரிஜினல் கதையில் ஒரு பிளாஷ்பேக் வைத்து, ஹீரோயின் வருவது போல் காட்சிகளை வைக்க உள்ளனராம். இதில் அஜய் தேவ்கனின் மனைவியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தேவைப்படும் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இது உறுதியாகும் பட்சத்தில் கைதி இந்தி ரீமேக், காஜல் அகர்வால் நடிக்கும் 6 வது இந்தி படமாக இருக்கும். இதற்கு முன் காஜல் நடித்த லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ் ஓடிடி.,யில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது