சத்குருவை பேட்டி எடுத்த காஜல்: அந்த தத்துவ வீடியோ இதோ
சென்னை: சத்குருவை பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
சிவராத்திரியின்போது சத்குருவின் ஆசிரம வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன் குடும்பத்துடன் சென்று டான்ஸ் ஆடினார் காஜல் அகர்வால். அவர் டான்ஸ் ஆடியபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் காஜல் சத்குருவை பேட்டி எடுத்துள்ளார்.
சத்குரு
காஜல் அகர்வால் சத்குருவை பேட்டி எடுத்து அவர் சொன்ன வாழ்க்கை தத்துவங்களை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தன்னை போன்றே பிறரும் சத்குருவின் தத்துவங்களை கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
சண்டை
அந்த வீடியோவில் காஜல் அகர்வால் தமிழ் பேசியிருப்பதை பார்த்து கோலிவுட் ரசிகர்கள் இம்பிரஸ் ஆகியுள்ளனர். உங்களுக்கு தமிழ் பேசத் தெரியும் என்று எங்களுக்கு இத்தனை நாட்கள் தெரியாதே என்று தெரிவித்துள்ளனர். காஜல் தமிழில் பேசியதை பார்த்த டோலிவுட் ரசிகர்களோ ஏன் தெலுங்கில் பேசவில்லை என்று கேட்டு கோபித்துக் கொண்டுள்ளனர்.

வேண்டாம்
படங்களில் நடித்தோமா, அந்த காசை மும்பையில் உள்ள நகைக் கடையில் போட்டு சம்பாதித்தோமா என்று மட்டும் இருங்க காஜல். இந்த ஆன்மீக வழி உங்களுக்கு வேண்டாம். நீங்கள் நீண்ட காலம் படங்களில் நடிக்க வேண்டும், அதை நாங்கள் பார்க்க வேண்டும். தயவு செய்து ஆன்மீகம், இமய மலை என்று மட்டும் சென்று விடாதீர்கள் என்று ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர். காஜல் மும்பையில் சொந்தமாக நகைக் கடை வைத்திருப்பது குறித்து தான் ரசிகர்கள் அப்படி தெரிவித்துள்ளனர்.

அப்டேட்
காஜல் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களோ, மேடம் உங்களின் பாரீஸ் பாரீஸ் படம் குறித்த அப்டேட் ஏதாவது கொடுங்களேன் என்று கேட்டுள்ளனர். கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயீன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த பாரீஸ் பாரீஸ். காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் புதுப்படம் ஒன்றிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











