Just In
- 5 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 51 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்!
ஜெய்பூர்: திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் சிறப்பு வழிபாடு நடத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது அவர் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தற்காப்பு கலைகள் கற்று வருகிறார்.
இந்தியன் 2 படத்தை தவிர வேறு எந்த புதிய படத்திலும் காஜல் கமிட்டாகவில்லை. திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகலாம் என்ற ஐடியா அவருக்கு வந்துவிட்டது. 34 வயதாகும் காஜலுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காஜலின் கண்டிசன்
தனது வருங்காலக் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வெளியிட்டார் காஜல். அவருக்கு மாப்பிள்ளை உறுதியாகி விட்டதாக தெரிகிறது. தொழிலதிபர் ஒருவர் காஜலை மணக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன்
அதை மேலும் உறுதிப்படுத்து வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தியுள்ள நடிகை காஜல் அகர்வால். தலையில் பூக்கூடையை சுமந்து வந்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.

வைரலான புகைப்படங்கள்
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த புகைப்படங்களில் காஜலுடன் அவரது தாயும் உள்ளார். மகளுக்கு திருமணம் உறுதியாகிவிட்ட சந்தோஷம் தாயின் முகத்தில் தெரிகிறது.
|
மாப்பிள்ளை கிடைச்சாச்சு
திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைத்து விட்டதால் தான் காஜல் இந்த நேர்த்தி கடனை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விரைவில் அவர் தனது வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.