இது 3 வருட காதல்.. அவர் காதல் சொன்ன தருணம் இருக்கே.. நடிகை காஜல் அகர்வால் ஜில் ஜிலீர்!

By

சென்னை: கவுதமை கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வருகிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்தார்.

இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

 அலங்காரம் செய்பவர்

அலங்காரம் செய்பவர்

அதன்படி இவர்கள் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்தது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காஜல் திருமணம் செய்திருக்கும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலு, உள் அலங்கார நிபுணர். வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் உள் அலங்காரம் செய்து கொடுப்பவர்.

தொடர்ந்து நடிக்க

தொடர்ந்து நடிக்க

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறியுள்ள காஜல், திருமணம் முடிந்த கையோடு, புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இதற்கான கிரகப்பிரவேசம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் நிற சேலை

மஞ்சள் நிற சேலை

திருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்த காஜல், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மஞ்சள் நிற சேலை அணிந்த கணவர் கவுதமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

மூன்றுவருட காதல்

மூன்றுவருட காதல்

இந்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் தங்களுடைய காதல் கதையை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், 'நாங்கள் ஏழு வருடங்கள் நண்பர்களாக இருக்கிறோம். மூன்று வருடங்களாகக் காதலித்து வருகிறோம். நண்பர்களாக இருக்கும்போதே அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறினோம்.

உணர்வுபூர்வ தருணம்

உணர்வுபூர்வ தருணம்

கவுதம் என்னிடம் காதலைச் சொன்னது மறக்க முடியாத, உணர்வுபூர்வமான தருணம். அதை என்னால் மறக்க முடியாது. நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருந்தோம். கொரோனா லாக்டவுன் காரணமாக நாங்கள் சந்திக்க முடியவில்லை. சேர்ந்து இருக்க முடிவு செய்தோம்.
கடந்த ஏப்ரலில் என் பெற்றோரிடம் திருமணம் பற்றி பேசினார். இப்போது எங்கள் திருமணம் நடந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X