விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் டீசர்.. தென்னிந்தியாவின் 4 சூப்பர்ஸ்டார்கள் ரிலீஸ் செய்யப் போறாங்க!
Recommended Video
சென்னை: விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் நாளை ரிலீசாகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், காஜல் அகர்வால், ராணா டகுபதி மற்றும் நிவின் பாலி இந்த டீசரை ரிலீஸ் செய்யவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
குடியரசு தினம்
குடியரசு தினத்தை முன்னிட்டு எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசரை வெளியிட நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் முடிவு செய்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், காஜல் அகர்வால், ராணா டகுபதி மற்றும் நிவின் பாலி இந்த டீசரை நாளை மாலை 6.05 மணிக்கு ரிலீஸ் செய்கின்றனர்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர் படத்தின் தலைப்பின் விரிவாக்கமாக ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். பிக்பாஸ் புகழ் ரய்சா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராட்சசன்
2018ம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷால் திரை வாழ்க்கையில் புதிய மைல் கல்லாக இருந்தது. இந்நிலையில், சிக்ஸ் பேக் உடம்பையெல்லாம் வைத்துக் கொண்டு எஃப்.ஐ.ஆர் என்ற டைட்டிலுடன் நடித்து வரும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ராட்சசன் படத்தை விட அதிகமாக எழுந்துள்ளது.

எத்தனை மொழிகளில்
எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பிரபலங்களை வைத்து விஷ்ணு விஷால் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதே போல இந்த படமும் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாகப் போகிறதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











