திருமணத்துக்கு பிறகு நடிக்கலை.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகும் பிரபல ஹீரோயின்!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வர இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

துல்கர் சல்மான்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இதில் வயதான கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ள ஹேய் சினாமிகா என்ற படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ளார். இதில் இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

நிஷா அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். இவரும் நடிகைதான். தமிழ், தெலுங்கு மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இஷ்டம் என்ற படத்தில் விமல் ஜோடியாக நடித்திருந்தார். இவர் காஜல் அகர்வாலுக்கு முன்பே தனது காதலர் கரண் வலேச்சாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமண ஏற்பாடு
இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த நிஷா அகர்வால், குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தார். தனது அக்கா காஜல் அகர்வாலின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை இவர்தான் கவனித்துக் கொண்டார்.

வெப்சீரிஸ் கதை
இவர் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கசின்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் நடிக்க வருவது பற்றி கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கதை கேட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











