ம்ஹூம் அதெல்லாம் பொய்.. அந்த ஹீரோ படத்தில் இருந்து விலகவில்லை.. நடிகை காஜல் அகர்வால் மறுப்பு!
ஐதராபாத்: நடிகை காஜல் அகர்வால் பற்றி வந்த தகவலை அவரது டீம் மறுத்துள்ளது.
Recommended Video
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி இப்போது நடிக்கும் படம், 'ஆச்சார்யா'.
இதை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

த்ரிஷா விலகல்
இதில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிபபதாகக் கூறப்படுகிறது. அவர் ஜோடியாக, இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார். இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார்.

விரைவில் சந்திக்கிறேன்
இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து, திடீரென விலகினர். இதுபற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். 'படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

காஜல் அகர்வால்
இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதும்தான் த்ரிஷா விலகியதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வாலிடம் பேசினர். அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் படக்குழு தயங்கியதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுப்பு
இந்தப் படத்தில் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு மற்ற படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால், கால்ஷீட் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை காஜலின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். அவர் சிரஞ்சீவி படத்தில் நடிப்பது உறுதிதான், தேவையில்லாமல் வதந்தி பரபரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











