காதல் கணவருடன் காஜல் ரொமான்டிக் போஸ்.. வைரலாகும் போட்டோ.. செம ஜோடி என வாழ்த்தும் ஃபேன்ஸ்!
மும்பை: நடிகை காஜல் அகர்வால், தனது காதல் கணவருடன் வெளியிட்டுள்ள ரொமான்டிக் ஸ்டில் வைரலாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு ஆச்சாரியா
இவர் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, நடன இயக்குனர் பிருந்தாவின் ஹேய் சினாமிகா, தெலுங்கில், சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சாரியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் நடித்துள்ள மும்பை சாகா முடிந்து விட்டது.

கிரகப்பிரவேசம்
தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். காதலரை கைப்பிடித்ததும் புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடத்தினார் காஜல். அதில் காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டா ஸ்டோரி
பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார். அந்த பேட்டி வைரலானது. கொரோனா பரவல் இருப்பதால், ஹனிமூனுக்கு செல்லமாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இன்ஸ்டா ஸ்டோரியில் பாஸ்போர்ட் மற்றும் பவுச் புகைப்படங்களை பதிவிட்டு, ரெடி டு கோ என்று சில குறிப்பிட்டு இருந்தார்.

மாலத்தீவு ஹனிமூன்
பின்னர் அவர்கள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு உலகின் முதல் அண்டர்வாட்டர் ஓட்டலான, முரகாவில் அவர்கள் தங்கினர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துவந்தார். அவை வைரலாயின. பின்னர் இந்தியா திரும்பிய அவர், ஆச்சாரியா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

கொட்டும் பனியில்
இந்நிலையில், அவர் தனது காதல் கணவருடன் இமாச்சலப் பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து கொட்டும் பனியில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு புத்தாண்டை வரவேற்பதாகக் கூறியிருந்தார்.

ரொமான்டிக் ஸ்டில்
இந்நிலையில், இப்போது மணாலி ரெசார்ட் ஒன்றில் நின்றபடி, ரொமான்டிக் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கணவர் கவுதம், பூ ஒன்றை அவரிடம் கொடுப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் செம ஜோடி என்று வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











