தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து!
சென்னை: நடிகர் காஜல் அகர்வாலுக்கு நாளை திருமணம் நடக்க இருக்கிறது. இதையடுத்து மெகந்தி விழா புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு திருமணம் நாளை நடக்க இருக்கிறது.
அதற்கான விழாக்கள் காஜல் அகர்வால் வீட்டில் தொடங்கிவிட்டன. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாவில் புகைப்படங்களாகப் பதிவிட்டு வருகிறார் காஜல்.

மெகந்தி போட்டோ
தனது சகோதரி நிஷா அகர்வாலுடனும் அவர் மகனுடனும் இருக்கும் புகைப்படங்களை போஸ்ட் பண்ணியிருந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது மெகந்தி அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவர் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில், நேற்று மெகந்தி விழா நடைபெற்றுள்ளது.

மாரி, ஜில்லா
நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். தமிழில் தமிழில், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தியன் 2, ஹேய் சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார்.

மகிழ்ச்சி அறிவிப்பு
இவர், கடந்த சில நாட்களுக்கு முன், திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். தொழிலதிபர், கவுதம் கிட்சிலுவுடன் தனது திருமணம் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்படி இவர்கள் திருமணம் நாளை நடக்கிறது.

எளிமை திருமணம்
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இருப்பதாக முதலில் கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருவதால், அவர் வீட்டில் எளிமையாகத் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ரொமான்ஸ் லுக்
இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார். அது வைரலானது. அதில் வருங்கால கணவர் கவுதம் கிட்சிலுவின் தோள் மீது கைபோட்டபடி சிரித்துக் கொண்டிருந்தார்.

அழைப்பு உண்டா?
இப்போது மெகந்தி கையுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். சில நெட்டிசன்ஸ், தமிழ்நாட்டுல இருந்து யாருக்கும் அழைப்பு உண்டா? என்று கேட்டுள்ளனர். சிலர் கல்யாணத்துக்குப் பிறகும் நடிப்பீங்கள்ல? என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











