காதல் சின்னம்.. கையில் மோதிரம்.. தொழிலதிபரை மணக்கிறாராமே நடிகை காஜல் அகர்வால்.. ரசிகர்கள் வாழ்த்து

By

சென்னை: பிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா

சிரஞ்சீவியின் ஆச்சார்யா

இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரும் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

பெற்றோர் முடிவு

பெற்றோர் முடிவு

இவர் காதல் திருமணம் முடிந்து மும்பையில் செட்டிலாகிவிட்ட நிலையில் காஜல் அகர்வாலும் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர், படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

கவுதம் கிட்ச்லு என்ற தொழிலதிபரை அவர் காதலித்து வருவதாகவும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இந்த நிச்சயதார்த்த விழாவில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சுரேஷ் கலந்துகொண்டதாகவும் தெலுங்கு சினிமாவில் தகவல்கள் வெளியாயின.

திருமண தேதி

திருமண தேதி

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு, தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவுடன் திருமணம் முடிவாகிவிட்டதாக பரபரப்பு தகவல் நேற்று வெளியாகி உள்ளது. இரு வீட்டார் குடும்பத்தினரும் பேசி திருமண தேதியை முடிவு செய்துவிட்டதாகவும் விரைவில் அதை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காதல் சின்னம்

காதல் சின்னம்

இதற்கிடையே காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில், காதல் சின்னத்தை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் கையில் மோதிரம் ஒன்று இருக்கிறது. அது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் கவலை அடைந்திருப்பதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X