twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டிலேயே இருங்க...ரசிகர்ளுக்கு காஜல் அகர்வால் வேண்டுகோள்

    |

    மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் மும்பையில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஏப்ரல் 26 வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது.

    ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல படங்களின் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.

    Kajal Aggarwal urges fans to stay home

    அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் உறவுகளை பறிகொடுத்தவர்களின் வலியை விளக்கி கூறி உள்ளார்.

    Kajal Aggarwal urges fans to stay home

    அத்துடன் பதிவிட்டுள்ள கேப்ஷனில், உலகம் இப்போது ஒரு மோசமான நிலையில் உள்ளது. இந்த தொற்றுநோய் நம்முடைய ஆரோக்கியம், பொறுமை ஆகியவற்றை நமக்குத் தெரியாத வழிகளில் சோதிக்கிறது. இது நமது உழைப்பிற்கு கூடுதல் சுமையல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயம். பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    Celebrities Holi celebrations | Sneha, Aishwarya Dhanush, Genelia, Shriya

    காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா, தமிழில் கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆச்சார்யா படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Kajal Aggarwal took to social media urging fans to stay home and not overburden the health care system.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X