நெட்பிளிக்ஸ்.. பிரைம்லாம் ஓரம்போ.. காஜல் அகர்வாலே இப்போ தூர்தர்ஷன் தான் பார்க்குறாங்க!

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 80 இறுதிகள் மற்றும் 90களில் ஒளிபரப்பான ராமாயணம் மற்றும் மகாபாரதங்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ராமாயணம் முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராமாயணம் பார்க்கும் காஜல்

மீண்டும் குழந்தை பருவத்துக்கு சென்றது போல உணர்கிறேன். அப்போதெல்லாம், குடும்பமாக அமர்ந்து, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை கண்டு ரசிப்பது தான் எங்கள் வீக்கெண்ட் பிளானாக இருந்தது. மீண்டும் அந்த அனுபவத்தை திருப்பித் தந்த தூர்தர்ஷனுக்கு நன்றி, இந்திய இதிகாசங்கள் குறித்து, குழந்தைகள் இதன்மூலம் நன்கு அறிந்து கொள்ளும் என ட்வீட் போட்டுள்ளார்.

இந்தியளவில் டிரெண்டிங்

ராமானந்த் சாகரின் கிளாசிக் ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டுள்ளதால், இந்திய அளவில் #Ramayan மற்றும் #Doordarshan டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த லாக் டவுன் பீரியடில், மக்கள் பீதியடையும் படங்களை கண்டு பயத்தை அதிகரித்துக் கொள்ளாமல் இருக்க, ராமாயணம் நல்ல தேர்வாக அமையும் என பல நெட்டிசன்களும், தாங்கள் பார்த்த காட்சிகளை போட்டோ எடுத்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டபுள் தமாக்கா

துர்தர்ஷன் சேனல், ராமாயணத்தை தினமும் காலை 9 மணி முதல் 10 மணி மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்புகிறது. அதே போல மகாபாரதம் சீரியலை மதியம் 12 மணிக்கு ஒரு எபிசோடையும், இரவு 7 மணிக்கு ஒரு எபிசோடையும் இன்று முதல் ஒளிபரப்புகிறது. இதனால், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு டபுள் தமாக்கா தான்.

சக்திமான் வேண்டும்

மகாபாரதம் மற்றும் ராமாயணம் சீரியல் இன்று முதல் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொடங்கி உள்ள நிலையில், பலரது விருப்பமும் சக்திமான் சீரியலை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்பது தான். அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னதாக, இந்தியாவின் சூப்பர் ஹீரோ சக்திமானை பார்த்துத் தான் பல 90ஸ் கிட்ஸ் வளர்ந்தனர்.

நெட்பிளிக்ஸுக்கு ஆப்பு

தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிலையில், இந்தியர்களின் கவனம் அதன் பக்கம் திரும்பியுள்ளதாகவும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் போன்ற மீம்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X