மீனும் நானும்.. கடலுக்கடியில் உள்ள அறையில் காதல் கணவருடன் நடிகை காஜல்.. இடமே அசத்தலா இருக்கே!

By

மும்பை: கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அறையில் நடிகை காஜல் அகர்வால் தனது காதல் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

முடிந்த கையோடு

முடிந்த கையோடு

காஜல் திருமணம் செய்திருக்கும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலு, உள் அலங்கார நிறுவனத்தை நடத்தி வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறியுள்ள காஜல், திருமணம் முடிந்த கையோடு, புதிய வீட்டில் குடியேறினார். இதற்கான கிரகப்பிரவேசம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

எப்படி காதலித்தோம்

எப்படி காதலித்தோம்

இதில் காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்தார் காஜல். அந்த புகைப்படங்கள் வைரலானது. பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார்.

ரெடி டு கோ

ரெடி டு கோ

கொரோனா பரவல் இருப்பதால், இப்போது அவர்கள் இப்போது ஹனிமூனுக்கு செல்லமாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இன்ஸ்டா ஸ்டோரியில் பாஸ்போர்ட் மற்றும் பவுச்சின் புகைப்படங்களை பதிவிட்டு, ரெடி டு கோ என்று சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார்.

கடலுக்குள் அறை

கடலுக்குள் அறை

எந்த நாட்டுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடப்படவில்லை. பின்னர் அவர்கள் மாலத்தீவுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. அங்கிருந்து தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் காஜல் அகர்வால், இப்போது கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அறையில், மீன்களை பார்த்தபடி காதல் கணவருடன் இருக்கிறார்.

மீன்களைப் பார்க்கிறேனா?

மீன்களைப் பார்க்கிறேனா?

இந்த போட்டோஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு கேப்ஷனாக, நான் மீன்களைப் பார்க்கிறேனா? அல்லது மீன்கள் என்னைப் பார்க்கிறதா? என்று கவித்துவமான கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு சில நெட்டிசன்ஸ், நீங்கள் எங்களை பார்க்கிறீர்களா? நாங்கள் உங்களைப் பார்க்கிறோமா? என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

தரையில் கடல்கன்னி

தரையில் கடல்கன்னி

சிலர், மீன்கள்தான் உங்களைப் பார்க்கிறது, ஏனென்றால் உலகின் அழகான பெண்களை மீன்களுக்கும் தெரியும் என கூறியுள்ளனர். வேறு சிலர், கடல் கன்னி தரையில் எப்படின்னு மீன்கள் வியந்திருக்கும் என வழிந்துள்ளனர். பல ரசிகர்கள், இருவரும் சூப்பர் ஜோடி, தீபாவளி வாழ்த்துகள் எனக் கூறியுள்ளனர்.

அறிமுக பொம்மலாட்டம்

அறிமுக பொம்மலாட்டம்

பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர், காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் வர இருக்கிறது. கமல்ஹாசனின் இந்தியன் 2, நடன இயக்குனர் பிருந்தாவின் ஹேய் சினாமிகா, தெலுங்கில் ஆச்சாரியா படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X