»   »  அங்கிட்டு தல, இங்கிட்டு சிரு: புடிச்சாலும் புளியங்கொம்புகளாக புடிச்ச காஜல்

அங்கிட்டு தல, இங்கிட்டு சிரு: புடிச்சாலும் புளியங்கொம்புகளாக புடிச்ச காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கும் காஜல் அகர்வால் கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் காதலியாக நடிக்கிறாராம்.

ஒரு காலத்தில் தெலுங்கு திரையுலகில் மட்டுமே கொடிகட்டிப் பறந்த காஜல் அகர்வால் தற்போது கோலிவுட்டிலும் ஜொலித்து வருகிறார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் காஜல் பற்றி ஒரு தகவல் வெளியானது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க காஜல் மறுத்துவிட்டார் என்று ஒரு தகவல் வெளியானது. என்ன, ஏது என்று விசாரித்தால் அந்த தகவலில் உண்மை இல்லையாம். யாரோ கிளப்பிவிட்டது ஊர் முழுவதும் பரவிவிட்டதாம்.

தல பொண்டாட்டி

தல பொண்டாட்டி

கோலிவுட்டில் அஜீத்தின் ஜோடியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அஜீத் குமாரின் தல 57 படத்தில் அவரின் மனைவியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். படத்தில் அக்ஷரா ஹாஸன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

புளியங்கொம்பு

புளியங்கொம்பு

தமிழில் அஜீத் படம், தெலுங்கில் சிரஞ்சீவியின் படம் இந்த பொண்ணு புடிச்சாலும் புளியங்கொம்புகளாக பிடித்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள். சிரஞ்சீவியின் படத்தை ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரீனா, சோனாக்ஷி

கரீனா, சோனாக்ஷி

சிரஞ்சீவியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், சோனாக்ஷி சின்ஹா, கத்ரீனா கைஃப் ஆகியோர் மறுத்துவிட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kajal Agarwal is the talk of Kollywood and Tollywood as she has bagged two big offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil