»   »  முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொஞ்ச காலம் பட வாய்ப்புகள் இல்லாமலிருந்த காஜல் அகர்வாலுக்கு, இப்போது அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள்.

அவற்றில் ஒன்றில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர்.

Kajal to be paired up with Vikram

தமிழில் சூர்யா, விஜய், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல், இப்போதுதான் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்கிறார்.

இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.

காஜல் அகர்வால்தான் இந்தப் படத்தின் நாயகி என்பதில் உறுதியாக நின்றவர் முருகதாஸ்தானாம். துப்பாக்கியிலிருந்து தொடரும் நட்பு காரணமாக கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்கிறார்கள்!

English summary
For the first time actress Kajal Agarwal is playing against Vikram in an untitled movie.
Please Wait while comments are loading...