twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்றா இரண்டா ஆசைகள்.... காஜலைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பொருந்தியிருக்காது - அபிலேஷ்

    |

    Recommended Video

    அமெரிக்காவில் AWARD வாங்கிய விஜய் ரசிகர் | SHORTFILM DIRECTOR INTERVIEW | FILMIBEAT TAMIL

    சென்னை: ஒன்றா இரண்டா ஆசைகள் குறும்படத்தை பார்த்த ஆட்டோ ட்ரைவர் தன்னுடைய வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக சொல்லி கட்டிப்பிடித்து கை குலுக்கி கண் கலங்கினார் என்று இக்குறும்படத்தின் இயக்குநர் அபிலேஷ் தெரிவித்தார்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களும் அதற்கு தகுந்தாற்போல் தங்களை தயார்படுத்திக்கொண்டு, போட்டி போட்டு தாங்களும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

    Kajal is the right choice for this character-Director Abilesh

    அதிலும் சினிமா என்றால் எடுத்த எடுப்பில் தங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்குள் எழுகிறது. இதற்காக புதிய புதிய உத்திகளுடனும் கதையுடனும் குறும்படங்களை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால், குறும்படங்களை எடுக்கும் அனைவரும் அதில் வெற்றி பெறுவதில்லை. வெகு சிலர் தான் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் அபிலேஷ். இவர் இயக்கிய ஒன்றா இரண்டா ஆசைகள் குறும்படம் அமெரிக்காவின் கேன்ஸஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றுள்ளது.

    சர்ச்சைகள்.. சண்டைகள்.. கலாய்ப்புகள்.. சிராய்ப்புகள்.. ஜாலி சினிமா!சர்ச்சைகள்.. சண்டைகள்.. கலாய்ப்புகள்.. சிராய்ப்புகள்.. ஜாலி சினிமா!

    சிறந்த குறும்படத்திற்கான சர்வதேச விருது பெற்ற மகிழ்ச்சியில் உள்ள அபிலேஷ், அது பற்றிய நிகழ்வுகளை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    இந்த குறும்படத்தில் மிகவும் மிரட்டலான கேரக்டரில் பிக்பாஸ் புகழ் காஜல் நடித்திருந்தார். இது பற்றி கருத்து தெரிவித்த அபிலேஷ், நான் இந்த கதையை எழுதும்போது, ஃபோட்டோக்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    அப்பொழுது, காஜல் நடித்திருந்த கேரக்டருக்கு நிறைய பேரோட பிக்சர்ஸ் பார்த்துக்கொண்டிருந்த போது, யாருமே செட் ஆவது மாதிரி எனக்கு தோன்றவில்லை. தற்செயலாக காஜலின் ஃபோட்டோவை பார்த்தவுடனே, இவர் தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்கு தோன்றியது.

    உடனடியாக, தெரிந்தவர்கள் மூலமாக அவரை தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவர் இந்த கதையைப் பற்றி ஃபோனிலேயே விளக்கச் சொன்னார். நானும் ஃபோனிலேயே கதையை சொன்னேன். அதைக் கேட்டு சந்தோசப்பட்டு, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, முழு ஒத்துழைப்பும் கொடுத்தார், மேலும், இந்த குறும்படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள், இந்த படத்தில் திரைக்கதையும், திருப்பங்களும் பிடித்திருந்தன என்று தான் சொன்னார்கள்.

    அதே மாதிரி இப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் பிடித்திருந்ததாக சந்தோசப்பட்டனர். கூடவே இசையும் வித்தியாசமாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த குறும்படத்தில் எடிட்டிங் மிக வித்தியாசமாக இருந்ததாக அனைவருமே குறிப்பிட்டு சொன்னார்கள்.

    எங்களால் மறக்க முடியாக விமர்சனம் என்றால், நானும் அசோக்கும் ரெகுலராக ஒரு கடையில் டீ குடிப்போம். அங்கு வழக்கமாக ஒரு ஆட்டோ டிரைவரும் டீ குடிக்க வருவார். இந்தப் படத்தை திரையிடும் அன்றைக்கு அவரையும் அழைத்திருந்தோம். அவரும் வந்து படத்தை பார்த்துவிட்டு எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் போய்விட்டார்.

    பிறகு, வழக்கமாக அந்த டீ கடைக்கு போயிருந்போது, அங்கு அந்த ஆட்டோ ட்ரைவரும் நின்றிருந்தார். எங்களைப் பார்த்ததும் ஓடிவந்து எங்களை கட்டிப்பிடித்து கைகுலுக்கி, இந்தப் படம் என்னோட லைஃப் போலவே இருக்குது, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி கண்கலங்கினார். அவர் ரொம்ப எமோஷனலாக பேசியது எனக்கு மறக்க முடியாத அனுபவமா இருந்தது.

    இந்த குறும்படத்தை எடுப்பது ஆரம்பத்தில் என்னுடைய அம்மாவுக்கு பிடிக்கவில்லை. படித்துவிட்டு ஏன் இந்த துறைக்கு போகவேண்டும் என்று சற்று வருத்தப்பட்டார்கள். ஆனால் குறும்படத்திற்கு விருது கிடைத்த உடனே வீட்டிலுள்ள அனைவருமே சந்தோசப்பட்டனர் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

    Read more about: award short film
    English summary
    The director of the Ondra Iranda Aasaigal short film Abilesh said that the auto driver, who saw the short film, mirrored his life and shook his hand.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X