பிக் பாஸ் சாண்டியுடன் பிரேக்கப்: காரணம் லவ் டார்ச்சர்- காஜல் ட்வீட்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாண்டி காஜல் பசுபதியின் முதல் காதல் என்று நெட்டிசன்கள் கிளப்பிவிட அவரோ சின்சியராக விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்திருக்கும் போட்டியாளர்களில் சிலரை பார்த்து வருத்தம் இருந்தாலும் இம்முறை பொறாமை, பித்தலாட்டம் எல்லாம் இல்லாமல் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 போட்டியாளர் சாண்டி பற்றி காஜல் பசுபதி போட்ட ட்வீட்டால் புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.
காஜல் பசுபதி
பிக் பாஸ் 3 வீட்டிற்குள் செல்லும் மூன்றாவது போட்டியாளர் சாண்டி என்ற ட்வீட்டை பார்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி ஒரு ஸ்மைலி போட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ என்ன டான், முதல் காதலா, முதல் காதல் தான் எப்பொழுதுமே ஸ்பெஷலானது என்று கமெண்ட் போட்டனர்.
அட்டக்கத்தி தினேஷ்
சாண்டி தனது முதல் காதல் என்று நெட்டிசன் போட்ட ட்வீட்டை பார்த்த காஜலோ, அய்யோ அவர் முதல் காதல் இல்லையே... கடைசி காதல்.. நான் அட்டக்கத்தி தினேஷ் மாதிரி என்று பதில் அளித்துள்ளார். நெட்டிசன்கள் விளையாட்டுக்கு ட்வீட் போட்டாலும் கூட காஜல் பசுபதி பொறுமையாக பதில் அளிக்கிறார்.
பிரேக்கப்
கடைசி காதல் என்கிறீர்கள், அப்போ ஏன் பிரேக்கப் என்று நெட்டிசன் ஒருவர் காஜலிடம் கேட்டார். அதற்கு அவரோ, பிரேக்கப்பா.. அது பெரிய கதை... நம்ம லவ் டார்ச்சர் தான்... வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதிலுக்கு காமெடி செய்துள்ளார் லேடி டான் காஜல் பசுபதி.
நெட்டிசன்கள்
பிக் பாஸ் 3 வீட்டில் சாண்டி மாஸ்டர் இருப்பதை பார்த்து காஜல் ரொம்ப ஹேப்பியாக இருக்கிறார். அதை பார்த்த அவரின் ரசிகர்களோ, இந்த சீசனில் நாங்களும் சாண்டிக்கே ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











