ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்!

By

சென்னை: பிரபல ஹீரோ ஒரே ஒரு வார்த்தை கூறியதை அடுத்து, ஹீரோயின்கள் ஓடோடி வந்து இணைந்துள்ளனர்.

Recommended Video

Kannum Kannum Kollaiyadithaal On Netflix | Dulquer Salman | Desingh Periyasamy

கொரோனா வைரஸின் தாக்கம் உலகை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் இந்த வைரஸால் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. இத்தாலியிலும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாதிப்பு

பாதிப்பு

இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக உயர்ந்துள்ளது, 149 பேர் உயிர் இழந்துள்ளனர். பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒர்க் அவுட்

ஒர்க் அவுட்

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். அவர்கள், வீட்டுக்குள் இருந்தாலும் டயட்டை தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். அதோடு, ஒர்க் அவுட்டையும் விடாமல் செய்து வருகின்றனர். சில பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களது ஒர்க் அவுட் வீடியோவை, சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

டிரைனிங்டன் சேலஞ்ச்

டிரைனிங்டன் சேலஞ்ச்

இந்நிலையில், பிரபல ஹீரோ மம்மூட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான், ஒரு சேலஞ்சை சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்தார். அதன்படி, டிரைனிங்டன் #trainingdone என்ற ஹேஷ்டேக்கில் ஒர்க் அவுட் முடித்த பின், அந்த லுக்குடன் போட்டோவை பதிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து பலர் இந்த சேலஞ்சில் இணைந்தனர்.

நானும் வந்துட்டேன்

நானும் வந்துட்டேன்

நடிகைகள் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி, ரிது வர்மா உட்பட பலர் ஓடோடி வந்து இணைந்தனர். பாகுபலி நடிகர் ராணவும் இதில் இணைந்து ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார். அதில், 'உங்க விளையாட்டுக்குள் வந்துவிட்டேன்' என்று அவர் கூறியுள்ளார். இந்த சேலஞ்ச், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

துல்கர் சல்மான், சமீபத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து காஜல், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோருடன், ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X