சின்ன வயசுலயே எனக்கு அந்தப் பிரச்னை இருந்தது.. அதை வெளிப்படையாகச் சொன்ன காஜல் அகர்வால்!

By

சென்னை: தனக்கு சிறு வயதில் ஆஸ்துமா பிரச்னை இருந்தது என்று நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் நடித்த பொம்மலாட்டம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு ஆச்சாரியா

தெலுங்கு ஆச்சாரியா

இவர் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் ரிலீஸ் ஆக இருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில், சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சாரியா படங்களில் நடித்து வருகிறார்.

எப்படி காதலித்தோம்

எப்படி காதலித்தோம்

தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார். அது வைரலானது.

ஆஸ்துமாவால் பாதிப்பு

ஆஸ்துமாவால் பாதிப்பு

இந்நிலையில், சிறுவயதிலேயே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டதாக இப்போது அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஐந்து வயதில் எனக்கு ஆஸ்துமா இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையாக இருக்கும்போதே உணவு கட்டுப்பாடுகள் இருந்தன. பிறகு வளர்ந்ததும் இந்தப் பிரச்னை சரியாகி விடவில்லை.

வித்தியாசம் உணர்ந்தேன்

வித்தியாசம் உணர்ந்தேன்

ஒவ்வொரு குளிர்காலத்திலும் இது அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் தூசி, புகை ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், இந்தச் சிக்கலில் இருந்து விடுபட, இன்ஹேலர் பயன்படுத்தத் தொடங்கினேன். உடனடியாகவே வித்தியாசத்தை உணர்ந்தேன்.

வெட்கப்பட ஏதுமில்லை

வெட்கப்பட ஏதுமில்லை

நம் நாட்டில் லட்சக் கணக்கானவர்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இன்ஹேலர் தேவைப்படுகிறது. சமூகத்துக்கு பயந்து அவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். தனியாகவோ, பொது இடங்களிலோ இன்ஹேலரை பயன்படுத்துவதில் வெட்கப்பட ஏதுமில்லை. அதனால், இன்ஹேலரை பயன்படுத்துமாறு என்னுடைய நண்பர்கள் மற்றும் பாலோயர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X