'பெத்த' தொகை கேட்ட காஜல்: ஸ்ருதியை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்
ஹைதராபாத்: கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க காஜல் அகர்வால் கேட்ட தொகையால் அந்த படத்தில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சூப்பர் ஹிட்டானது. அதுவரை தெலுங்கில் லக் இல்லாத நடிகையாக இருந்த ஸ்ருதிக்கு கப்பார் சிங் வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.
இதையடுத்து டோலிவுட்டில் ஸ்ருதியின் மார்க்கெட் எகிறிவிட்டது.

கப்பார் சிங் 2
கப்பார் சிங் 2 படத்தில் ஹீரோ பவன் கல்யாண். ஹீரோயினாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முடிவு செய்தனர்.

வேண்டவே வேண்டாம்
கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க கஜால் அகர்வால் தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று ஒரு பெரிய தொகையை கூறியதும் தயாரிப்பாளர் அங்கிருந்து ஓடி வந்துவிட்டாராம்.

மீண்டும் ஸ்ருதி
காஜலுக்கு இவ்வளவு தொகையெல்லாம் கொடுக்க முடியாது என்று நினைத்த தயாரிப்பாளர் மீண்டும் ஸ்ருதி ஹாசனையே ஒப்பந்தம் செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











