காஜல் அகர்வால் கல்யாண அறிவிப்பால்.. ரசிகர்களின் கலாயில் சிக்கிய பிரபல ஹீரோ.. முன்னாள் காதலரா?
ஐதராபாத்: நடிகை காஜல் அகர்வாலின் திருமண அறிவிப்பால் இளம் ஹீரோ ஒருவர், நெட்டிசன்களின் கடுமையான கிண்டலுக்கு ஆளானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் பிரபல நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் ஜோடி
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கிறார்.

குடும்பத்தினர்
இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் ஒப்பந்தமாகி இருக்கிறார். காஜலில் தங்கை திருமணமாகி செட்டிலாகி விட்ட நிலையில் காஜலும் திருமணம் செய்துகொள்வார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.

தொழிலதிபர் கவுதம்
ஆனால் அவர், படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு, தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவுடன் திருமணம் முடிவாகிவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

திருமண அறிவிப்பு
இதற்கிடையே, காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப்பக்கத்தில் திருமணத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதில் கவுதம் கிட்சிலுவுடன் தனது திருமணம் வரும் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது என்று கூறியிருந்தார். ரசிகர்களின் வாழ்த்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

சாய் ஶ்ரீனிவாஸ்
இந்நிலையில், தெலுங்கு ஹீரோ பெல்லங்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு காஜல் நன்றி தெரிவித்தார். சாய் ஶ்ரீனிவாஸும் காஜல் அகர்வாலும் சீதா என்ற படத்தில் நடித்தபோது காதலில் விழுந்ததாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. சாய் ஶ்ரீனிவாஸ், பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன்.

கலாய் மீம்ஸ்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் காஜலையும் சாய் ஶ்ரீனிவாசையும் இணைந்து, கிண்டல் செய்ய தொடங்கி விட்டனர் நெட்டிசன்ஸ். சாய் ஶ்ரீனிவாஸுக்கு பலர் ஆறுதல் சொல்வது போல மீம்ஸ்களையும் உருவாக்கி கலாய்த்து தள்ளியுள்ளனர். இது தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











