சசிலலிதா: சசியாக அமலா பால், ஜெயலலிதாவாக தனுஷ் வில்லி?

By Siva

Recommended Video

சசிலலிதா படத்தில் யார் நடிப்பார்?

சென்னை: சசிலலிதா படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் மற்றும் அமலா பாலை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போகிறோம் என்று இதுவரை 6 பேர் அறிவித்துள்ளனர். அதில் ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

ப்ரியதர்ஷினி இயக்கும் அயர்ன் லேடி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

போஸ்டர்

போஸ்டர்

ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதா மற்றும் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை சசிலலிதா என்ற பெயரில் அதுவும் இரண்டு பாகங்களாக இயக்க உள்ளார். அண்மையில் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அமலா பால்

அமலா பால்

சசிலலிதா படத்தில் பாலிவுட் நடிகை கஜோலை ஜெயலலிதாவாகவும், அமலா பாலை சசிகலாவாகவும் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் ஜெகதீஸ்வர ரெட்டி. விஐபி 2 படத்தில் தனுஷின் வில்லியாக நடித்த கஜோல் ஜெயலலிதாவாக செட்டாவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

வம்பு தும்பு

வம்பு தும்பு

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் அமலா பால் வம்பு தும்பே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் சசிகலாவாக நடிக்க ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.

புதுப்படம்

புதுப்படம்

ஜெகதீஸ்வர ரெட்டி முன்னதாக மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமா ராவ் மற்றும் அவரின் மனைவி லக்ஷ்மி பார்வதி பற்றி படம் எடுக்கப்போவதாக அறிவித்தார். அந்த படம் இன்று வரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X