பார்ட்டியில் ஓவர் போதை.. தள்ளாடியபடி வந்த நடிகையின் மகள்.. மும்பையில் நடக்கும் கூத்து!
சென்னை: பிரபல நடிகையின் மகள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, தலைக்கு ஏறிய போதையுடன் நடந்து வந்து காரில் ஏறி சென்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகளா இப்படி என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக கொடி கட்டிப்பறந்தவர் நடிகை கஜோல். இவர் பாலிவுட் ஸ்டார், ஷாருக்கான், சல்மான், அமீர் கான், அஜய் தேவ்கன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்த மின்சார கனவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவெ வெண்ணிலவே பாடல் இன்று வரையும் அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது. இந்த படம் மட்டுமில்லாமல், தனுஷ் நடித்த விஜபி படத்திலும் நடித்திருந்தார்.

காதல் திருமணம்: நடிகை கஜோல் பாலிவுட் ஸ்டார் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 21 வயதில் நைசா என்கிற மகளும், 13 வயதில் யுக் தேவ்கன் மகனும் உள்ளனர். பிரபலங்களின் குழந்தைகள் என்பதால், இவர்களின் போட்டோக்கள் இணையத்தில் அவ்வப்போது டிரெண்டாகும். அந்த வகையில் தற்போது, நைசா தள்ளாடிய படி நடந்து வந்த வீடியோ வெளியானது. பிறந்த நாள் பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே வந்த அவர் நடக்கவே முடியாதபடி குடிபோதையில் தள்ளாடிக்கொண்டே நடந்து வந்து காரில் ஏறிச்சென்றார்.
போதையில் மகள்: இதைப்பார்த்த இணையவாசிகள் பிரபலங்களின் குழந்தைகள் மது அருந்துவது, போதை வஸ்துக்களை பயன்படுத்துவது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. நடிகர்களின் கலாச்சாரமே வேறு, தினமும் பார்ட்டி, பப் என போனால் குழந்தைகளும் அதைத்தான் செய்வார்கள் என்றும், நைசாவின் பெற்றோரான கஜோல் மற்றும் அஜய் தேவ்கனும் மகள் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க வேண்டும், திரைப்படத்தில் மட்டும் நல்ல அப்பாவாக இருந்தால் போதாது நிஜவாழ்க்கையிலும் ஒரு நல்ல தந்தையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். கஜோலின் மகள் நைசா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல என நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











