ஹை ஹீல்ஸால் வந்த வினை: ரசிகர்கள் முன்பு கீழே விழுந்த நடிகை, வைரல் வீடியோ

By Siva

Recommended Video

ரசிகர்கள் முன்பு கீழே விழுந்த கஜோல் வைரல் வீடியோ

மும்பை: மும்பையில் உள்ள மால் ஒன்றில் நடிகை கஜோல் கீழே விழுந்த போது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கஜோல் மும்பையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு வியாழக்கிழமை சென்றார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் தனது பாதுகாவலர்களுடன் சென்றார்.

அவரை காண ஷாப்பிங் மாலில் கூட்டம் கூடியிருந்தது. வெள்ளை நிற கவுன் அணிந்து ஹை ஹீல்ஸில் ஒய்யாரமாக நடந்து சென்றார் கஜோல். திடீர் என்று அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

விழுந்தபோது தனது பாதுகாவலரின் சட்டையை பிடித்ததால் காயம் எதுவும் இன்றி தப்பினார். ஹை ஹீல்ஸால் தான் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது.

அவர் கீழே விழுந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கஜோல் தனுஷின் விஐபி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X