2 பிள்ளைகள் பெற்ற நடிகையை பற்றிய வில்லங்க விஷயத்தை தெரிவித்த இயக்குநர்
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை கஜோல் பற்றிய ரகசியத்தை உளறிவிட்டார் இயக்குநர் கரண் ஜோஹார்.
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹாரும், நடிகை கஜோலும் நல்ல நண்பர்கள் ஆவர். இந்நிலையில் கரண் மற்றும் கஜோல் சேர்ந்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் ஒருவரை பற்றிய ரகசியத்தை மற்றொருவர் வெளியிட்டுவிட்டனர்.

காமெடி
டிஸ்கோதெக்கில் நடந்த ஒரு படத்தின் பார்ட்டியில் தான் நான் கரண் ஜோஹாரை முதன்முதலாக சந்தித்தேன். அவர் அணிந்திருந்த உடை காமெடியாக இருந்தது. அதை பார்த்து எந்த மாதிரி ஆம்பள இப்படி டிரஸ் பண்ணுவான் என நினைத்து விழுந்து விழுந்து சிரித்தேன் என்றார் கஜோல்.

கஜோல்
ஹென்னா பட ப்ரீமியரில் நான் கஜோலை சந்தித்தேன். அவருக்கு அப்பொழுது அக்ஷய் குமார் மீது பெரிய கிரஷ் இருந்தது. அதனால் ப்ரீமியருக்கு அக்ஷய் வருவார் என்று கடைசி வரை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. அந்த நிகழ்ச்சியின்போது கஜோலுடன் சேர்ந்து நானும் அக்ஷய்க்காக காத்திருந்தேன். அது தான் எங்கள் நட்பின் துவக்கம் என்று கரண் தெரிவித்தார்.

நட்பு
நானும், கஜோலும் தென் மும்பையில் தங்கியிருந்தோம். அங்கு எங்களின் நட்பு மேலும் வளர்ந்தது. கஜோல் விழுந்து விழுந்து சிரித்த பார்ட்டிக்கு நான் சென்றபோது எனக்கு வயது 17. கஜோல் அரை மணிநேரம் என்னை பார்த்து சிரித்தார். எனக்கு கஷ்டமாகிவிட்டது என்று கரண் கூறினார்.

மெர்சிடீஸ்
என் அப்பா எனக்கு மெர்சிடீஸ் என்று பெயர் வைக்க விரும்பினார். ஒரு நபர் தன் மகளின் பெயரில் நிறுவனம் துவங்கும்போது நான் ஏன் என் மகளுக்கு அந்த பெயரை வைக்கக் கூடாது என்று நினைத்தார் என் அப்பா என்றார் கஜோல்.


Click it and Unblock the Notifications











