Exclusive: ஜெ.வாக நடிக்கும் கஜோல்.. ‘ஆடை’யில்லாமல் நடித்ததால் சசி கதாபாத்திரத்தை இழந்த அமலாபால்!

சசிலலிதா படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை கஜோல்.

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான சசிலலிதா படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை கஜோல்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் அதிக போட்டி நிலவுகிறது. ஏ.எல்.விஜய் ஒரு படமும், மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி ஒரு படமும் இயக்க உள்ளனர். இவர்களை தவிர இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவை பற்றி ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். பிரியதர்ஷினி படத்தில் நித்யாமேனன் ஜெ. வேடம் ஏற்கிறார்.

 முந்தும் சசிலலிதா

முந்தும் சசிலலிதா

இதற்கிடையே, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி, சசிலலிதா எனும் பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவாக கஜோல்

ஜெயலலிதாவாக கஜோல்

சசிலலிதா படத்தில் தான் கஜோல் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜெகதீஸ்வர ரெட்டியிடம் கேட்ட போது, "ஜெயலலிதாவாக வேடத்தில் நடிக்க கஜோல் பொருத்தமாக இருப்பார் என எனக்கு தோன்றியது. அதனால் தான் அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் ஸ்கிரிப்டை படித்துவிட்டு முடிவை சொல்வதாகக் கூறியிருக்கிறார். கஜோலிடம் ஸ்க்ரிப்டை கொடுத்துள்ளோம். விரைவில் இதுகுறித்து தெரியவரும்", என்றார்.

சசிகலாவாக அமலா பால்

சசிகலாவாக அமலா பால்

சசிகலாவாக யாரை நடிக்க வைக்க இருக்குறீர்கள் என கேட்டபோது, "அமலா பாலை தான் முதலில் சசிகலா வேடத்துக்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். ஆனால் அவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். எனவே தெலுங்கு நடிகை அனுசயா பரத்வாஜ் என்பவரை சசிகலா வேடத்திற்கு முடிவு செய்துள்ளோம்", எனக் கூறினார்.

நமிதா எடைகுறைத்தால்?

நமிதா எடைகுறைத்தால்?

ஒருவேளை கஜோல் நடிக்க மறுத்துவிட்டால் வேறு யாரை மனதில் வைத்திருக்கிறீர்கள் என்றோம். அதற்கு அவர், "கஜோல் ஒப்புக்கொள்வார் என உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வேறு யாரையாவது தேட வேண்டும். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நமிதா விருப்பத்துடன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் மிகவும் குண்டாக இருப்பதால் யோசனையாக உள்ளது. ஒருவேளை அவர் உடல் எடையை குறைத்தால் யோசிக்கலாம்", எனக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

யார் முந்துவார்கள்?

யார் முந்துவார்கள்?

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள்ளாக ஜெயலலிதா படத்தை எடுத்து முடித்துவிட ஜெகதீஸ்வர ரெட்டி திட்டமிட்டுள்ளார். இவர் மட்டுமல்ல மற்ற இயக்குனர்களும் அதே நிலைபாட்டில் தான் இருக்கிறார்கள். யார் முந்துகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X