ஒரே ஒரு அதிரடி ஆக்‌ஷன் காட்சி...பார்த்ததுமே அந்த உரிமை விற்றுவிட்டதாம்... படக்குழு ரொம்ப ஹேப்பி!

By

சென்னை: ஒரே ஒரு ஆக்‌ஷன் காட்சியை மட்டுமே காண்பித்து, படத்தின் உரிமை ஒன்றை விற்றுள்ளது படக்குழு.

Recommended Video

Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம், தமிழரசன். இதன் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

இதில் ரம்யா நம்பீசன், மலையாள நடிகர் சுரேஷ்கோபி, சோனு சூட், சங்கீதா, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள்

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். படத்துக்கு பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவில் நடந்தது.

உறைபனிக்கு நடுவே

உறைபனிக்கு நடுவே

இதில், அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், சென்ட்ராயன், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக, உறைபனிக்கு நடுவே அருண்விஜய் போடும் குதிரை சண்டைக் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. இந்தப் படத்தை அடுத்து, விஜய் ஆண்டனி நடிக்கும் படம், 'காக்கி'. இதை வாய்மை படத்தை இயக்கிய செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

தனது ஓபன் தியேட்டர் நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கிறார். இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்காக எண்ணூரில் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. சுமார் 10 நாட்கள் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சியில் விஜய் ஆண்டனி, முதன்முறையாக, கயிற்றில் தொங்கி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

சேட்டிலைட் உரிமை

சேட்டிலைட் உரிமை

இந்தக் காட்சியை, ஸ்டன்ட் இயக்குனர் கனல் கண்ணன் அமைத்துள்ளார். இப்போது இந்த ஒரு காட்சியை மட்டுமே காட்டி, படத்தின் இந்தி சேட்டிலைட் உரிமையை விற்றுவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. வழக்கமாக விஜய் ஆண்டனி படங்களின், இந்தி சேட்டிலைட் உரிமை ஒரு தொகைக்கு வாங்கப்படும். இந்தப் படம் அதற்கும் அதிகமாக விற்றுள்ளதாகப் படக்குழு ஹேப்பியாக இருக்கிறது. ஆனால், தொகை எவ்வளவு என்று தெரிவிக்க வில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X