மன்னிப்பு கேட்டனரா சாண்டி, கவின் கேங்? அசிங்கப்படுத்திய மதுமிதா.. தீயாய் பரவும் டிவிட்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட மதுமிதாவிடம் கக்கூஸ் கேங் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா சக போட்டியாளர்களின் டார்ச்சரால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் வனிதா, ஷெரின், சாண்டி, கவின், அபிராமி, லாஸ்லியா உள்ளிட்டோரின் துன்புறுத்தலுக்கு ஆளானார் மதுமிதா.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கையை கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை தொடர்ந்து முக்கிய விதியை மீறியதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர்கள்தான் காரணம்
தன்னுடைய மன உளைச்சலுக்கு காரணம் வனிதா, ஷெரின், சாண்டி, கவின், அபிராமி, லாஸ்லியா ஆகியோர் தான் என வெளிப்படையாக குற்றம் சாட்டிய மதுமிதா, அவர்களை திட்டாமல் கண்டிக்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
யாரும் பேச வேண்டாம்
இந்நிலையில் மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் அவர்கள் மனம் வருந்தி கேட்டுக்கொண்டதால் பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம் என டிவிட்டியுள்ளார்.

கக்கூஸ் கேங்
அவர்களை கக்கூஸ் கேங் என சொல்ல நினைத்திருப்பார் போல மதுமிதா, கக்கூஸ் கேங் என்று சொல்லாமல் டேஷ் கேங் என டிவிட்டியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சில் கவின், சாண்டி உள்ளிட்டோர் எந்நேரமும் கக்கூஸே கதி என கிடந்தனர்.

கக்கூஸ்லியா
இதனால் கவினை சமூக வலைதளங்களில் கக்கூஸ் கவின் என்றும் லாஸ்லியாவை கக்கூஸ்லியா என்றும் அவர்களின் கேங்கை கக்கூஸ் கேங் என்றும் நெட்டிசன்கள் அழைத்து வந்தனர். அதனை மனதில் வைத்து டிவிட்டியுள்ள மதுமிதா, அவர்களின் நாற்றத்தை பற்றி யாரும் பேச வேண்டாம் என நக்கலடித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டாங்களா?
மதுமிதா மோசஸின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், 8 பேரும் மன்னிப்பு கேட்டாங்களா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











