»   »  பிக் பாஸ் வீட்டில் நமீதாவை பாத்ரூம் கழுவவிட்டதை பார்த்து அழுத கலா மாஸ்டர்

பிக் பாஸ் வீட்டில் நமீதாவை பாத்ரூம் கழுவவிட்டதை பார்த்து அழுத கலா மாஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நமீதாவை பாத்ரூம் கழுவவிட்டதை பார்த்து கலா மாஸ்டர் கண்கலங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதா கலந்து கொண்டுள்ளது மச்சான்ஸ்களை குஷியடைய வைத்துள்ளது. ஆனால் நமீதாவை பாத்ரூம் கழுவவிட்டதை பார்த்த மச்சான்ஸ் சமூக வலைதளங்களில் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டித் தீர்க்கிறார்கள்.

கலா மாஸ்டர்

கலா மாஸ்டர்

கலா மாஸ்டரும், நமீதாவும் நெருங்கிய தோழிகள். தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிக்கு கலா மாஸ்டருடன் சேர்ந்து நடுவராக இருந்தார் நமீதா. அதில் இருந்து அவர்கள் நெருக்கமாகிவிட்டனர்.

நமீதா

நமீதா

பிக் பாஸ் வீட்டில் நமீதாவை பாத்ரூம் கழுவவிட்டதை டிவியில் பார்த்த கலா மாஸ்டர் கண்கலங்கியுள்ளார். எப்படி இருந்த பெண்ணை இப்படி டாய்லெட் கழுவ வச்சுட்டாங்களேன்னு அழுதுள்ளார்.

சுத்தம்

சுத்தம்

நமீதாவுக்கு தான் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அவரே சுத்தம் செய்வார் இல்லை என்றால் யாரையாவது அழைத்து வந்து சுத்தம் செய்யச் சொல்வார் என்கிறார் கலா மாஸ்டர்.

பக்தி

பக்தி

நமீதாவுக்கு பக்தி அதிகம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஓரமாக உட்கார்ந்து ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று சொல்வார் என்கிறார் கலா மாஸ்டர். பிக் பாஸ் வீட்டிலும் நமீதா ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று சொல்லியதை ஜூம் செய்து காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kala master has cried after seeing her good friend Namitha cleaning toilets in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil