இதெல்லாம் ஒரு பொழப்பா..பயில்வானை லெப்ட் ரைட் வாங்கிய கலா மாஸ்டர்!

சென்னை : நடிகர், நடிகைகள் பற்றி அவதூறாக பேசிய வரும் பயில்வான் ரங்கநாதனை கலா மாஸ்டர் மிகவும் காட்டமாக பேசி லெப்ட் ரைட் வாங்கி உள்ளார்.

தமிழில் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக அவர்களின் அந்தரங்க விஷயங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல தனது யூடியூப் சேனலில் பேசிவருகிறார். இதனால்,பல நடிகர், நடிகைகள் இவரை படுமோசமாக விமர்சித்தும் தொடர்ந்து அப்படியே பேசிவருகிறார்.

அடிக்க பாய்ந்த ரேகா

அடிக்க பாய்ந்த ரேகா

சமீபத்தில் இரவின் நிழல் படத்தில் அரைநிர்வாணமாக நடித்த ரேகா நாயர் பற்றி தனது யூடியூப் சேனலில் வரம்பு மீறி பேசியிருந்தார். இதையடுத்து,கிழக்கு கடற்கரை சாலைக்கு உடற்பயிற்சி செய்ய வந்த பயில்வானை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டார் ரேகா. மேலும், நான் அம்மனாக நடிப்பேன் அதைக் கேட்க நீ யார்..? நான் உன்னுடைய பிள்ளையா.. இல்ல உன் பொண்டாட்டியா? என கடும் கோபத்துடன் பாயில்வானை அடிக்க பாய்ந்தார் இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஒரு வரம்பு இருக்கிறது

ஒரு வரம்பு இருக்கிறது

இதையடுத்து,நடிகை மீனாவின் கணவர் மரணம் குறித்தும் சர்ச்சையாக பேசி இருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கலா மாஸ்டர், நடிகரோ, நடிகையோ படத்தில் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சனம் செய்யலாம் அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பற்றி பேசுவது மிகவும் தவறான விஷயம்.

அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது

அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது

ஒரு நடிகரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் போது, அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட அனைவரையும் அது காயப்படுத்தும், அப்படி ஒருவரை காயப்படுத்தி பேசுவதால் என்ன சந்தோஷம் வந்துவிடப்போகிறது. நான் அது போல் யாரையும் பேச மாட்டேன், அதுபோன்று பேசுபவர்களின் யூடியுப் சேனலையும் பார்க்க மாட்டேன். அப்படி பேசுபவர்களை பார்க்கும் போது எரிச்சலாக வருகிறது.

லெப்ட் ரைட் வாங்கிய கலா மாஸ்டர்

லெப்ட் ரைட் வாங்கிய கலா மாஸ்டர்

ஒருவரை பற்றி அசிங்கமாக பேசி, நீங்கள் போடும் வீடியோக்களை நிறைய பேர் பார்க்கலாம், லைக் பண்ணலாம் அதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரலாம். மற்றவர்கள் குடும்பத்தை கஷ்டப்படுத்தி வரும் காசை வச்சு என்னதான் செய்யப் போறீங்க இதெல்லாம் ஒரு பொழப்பா என பயில்வானை ரங்கநாதனை கலா மாஸ்டர் லெப்ட் ரைட் வாங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X