முதல் பிரச்சாரமாம்.. பிறந்த மண்ணில் இருந்து தொடங்கிய பிரபல பெண் நடன இயக்குநர்.. செம கிழி!
சென்னை: பிரபல பெண் நடன இயக்குநர் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா பெங்காலி, இங்கிலிஷ், இட்டாலியன், ஜப்பனிஸ் என பல மொழி படங்களுக்கு கோரியோகிராஃப் செய்துள்ளார்.
இதுவரை 4000 பாடல்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் கலா மாஸ்டர். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தேசியவிருது முதல் தமிழக அரசின் விருது வரை ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் கலா மாஸ்டர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

2004ல் திருமணம்
அதில் இவர் பேசும், கிழிச்சிட்டடா டயலாக் பெரும் பிரபலமானது. தொடர்ந்து மலையாள மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றார். 2004ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதல் பிரச்சாரம்
இந்த தம்பதிக்கு வித்யூத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கலா மாஸ்டர் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈரோட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் கலா மாஸ்டர்.

இன்ஸ்டாவில் போட்டோக்கள்
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் கலா மாஸ்டர். இதுதொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

முதல் பிரச்சார பயணம்
மேலும், 'என்னுடைய முதல் பிரச்சார பயணம் நான் பிறந்த மண் ஈரோட்டில் இருந்து இன்று தொடங்கினேன்! என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











