இனி கிழி கிழி தான் … நடிகையாக மாறும் கலா மாஸ்டர்… எந்த படத்தில் தெரியுமா ?

சென்னை : திரைத்துறையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் அசைக்க முடியாத நடன இயக்குநராக இருப்பவர் கலா மாஸ்டர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடனக்கலைஞராக இருந்தாலும் இதுவரை திரையில் தோன்றியது.

தற்போது கலா மாஸ்டர் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலா மாஸ்டர்

கலா மாஸ்டர்

உதவியாளராக இருந்த கலா மாஸ்டர் ,கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே நடனத்தில் முத்திரைப்பதித்து பெயர் எடுத்தார். அதைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

நடிகையாக

நடிகையாக

இத்தனை நாட்கள் திரைக்கு பின்னாள் மட்டுமே ஜொலித்துக்கொண்டு இருந்த கலா மாஸ்டர் முதன்முறையாக நடிகையாக அறிமுகமாக உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்காக கலா மாஸ்டர் 20 கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறுப்படுகிறது.

காத்து வாக்குல இரண்டு காதல்

காத்து வாக்குல இரண்டு காதல்

நானும் ரவுடிதான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி நயன்தாரா,சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லலித் குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

அதோடு இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், காதீஜா எனும் பெயரில் சமந்தாவும், கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்துள்ளனர். இது குறித்து சமீபத்தில் வெளியான மூன்று போஸ்டர்களும் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X