twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தினமும் 15 டின் பீர்.. காய்கள் மூலம் பரவிய விஷம்.. கலாபவன் மணி மரணத்தின் அதிர வைக்கும் பின்னணி!

    |

    சென்னை: நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கான காரணங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஹியூமர் சென்ஸ் நிறைந்த வில்லன் நடிகர் என்றால் அது கலாபவன் மணி தான். விக்ரமுடன் இணைந்து ஜெமினி படத்தில் நடித்த அவர் அட்டகாச பர்ஃபாமன்ஸால் அப்பளாஸை அள்ளினார்.

    தொடர்ந்து அவர் வில்லனாக நடித்த அத்தனை படங்களிலும் சிறந்த நடிப்பால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். மலையாள நடிகரான கலாபவன் மணி, தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    ரத்த வாந்தியுடன் மயக்கம்

    ரத்த வாந்தியுடன் மயக்கம்

    இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கிக் கிடந்தார் கலாபவன் மணி. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    குடும்பத்தினர் சந்தேகம்

    குடும்பத்தினர் சந்தேகம்

    ஆனால் சிகிச்சைப்பலனின்றி அன்றே மரணமடைந்தார் கலாபவன் மணி. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர் குடும்பத்தினர்.

    சிபிஐக்கு உத்தரவு

    சிபிஐக்கு உத்தரவு

    இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கல்லீரல் பாதிப்பு

    கல்லீரல் பாதிப்பு

    இந்நிலையில் 32 பக்க விசாரணை அறிக்கையை கொச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கலாபவன் மணியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் அவர் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் எச்சரிக்கை

    மருத்துவர்கள் எச்சரிக்கை

    கலாபவன் மணி தினமும் 15 டின் பீர் குடித்து வந்துள்ளார். இதனால் அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மது குடிக்கக்கூடாது என மருத்துவர்கள் கலாபவன் மணியை எச்சரித்துள்ளனர்.

    எத்தனால் மிக்ஸிங்

    எத்தனால் மிக்ஸிங்

    ஆனால் அவர் மருத்துவர்களின் எச்சரிக்கையை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலாபவன் மணிக்கு பீருடன் எத்தனால் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மெத்தில் ஆல்கஹால்

    மெத்தில் ஆல்கஹால்

    ஏற்கனவே கலாபவன் மணியின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் மெத்தில் ஆல்கஹால் அவரது உடலில் இருந்து நீக்கப்படாமல் இருந்துள்ளது. கலாபவன் மணியின் உடலில் 6 மில்லி கிராம் மெத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

    ஆபத்தான அளவில்லை

    ஆபத்தான அளவில்லை

    ஆனால் அவரது மரணத்திற்கு மெத்தில் ஆல்கஹால் காரணமில்லை என்றும், அது ஆபத்தான அளவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பச்சை காய்கறிகள்

    பச்சை காய்கறிகள்

    மேலும் கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பச்சையாக காய்கறிகளை உண்ணும் பழக்கம் இருந்ததாகவும், அதனால் அவரது உடலில் க்ளோர்பைரிபோஸ் என்ற பூச்சிக் கொல்லி கலந்திருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கென்னாபினாய்டுஸ்

    கென்னாபினாய்டுஸ்

    மேலும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டதால் கென்னாபினாய்டுஸ் அவரது ரத்தத்தில் கலந்திருந்ததும் சிபிஐயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கலாபவன் மணியின் மரணம் முழுக்க முழுக்க கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டது என்றும் கொலை இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

    சந்தேகப்படும்படி எதுவுமில்லை

    சந்தேகப்படும்படி எதுவுமில்லை

    இந்நிலையில் கலாபவன் மணியின் நெருங்கிய நண்பர்களாக இடுக்கி ஜாஃபர் மற்றும் சபுமோன் ஆகியோரை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.அதில் அவர்களின் உடலில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    மறு கூறாய்வு குழு

    மறு கூறாய்வு குழு

    இதனிடையே திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் கலாபவன் மணியின் உடலை மறு கூறாய்வு செய்தனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Kalabhava mani's death is not a murder said CBI report. Kalabhavan Mani death was caused by liver problem.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X