twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல நடிகர் கலாபவன் மணி இறப்புக்கு காரணம் என்ன காரணம்? சிபிஐ அறிக்கை தாக்கல்

    By
    |

    கொச்சி: நடிகர் கலாபவன் மணி, கொலை செய்யப்படவில்லை என்று சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    நடிகர் கலாபவன் மணி கடுமையான கல்லீரல் நோய் பாதிப்பால்தான் உயிரிழந்ததாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழில், விக்ரமின் ஜெமினி, ஜெயம் ரவியின் மழை, விஜய்யின் புதிய கீதை, ரஜினியின் எந்திரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    2019ஆம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த படம் எது.. ஓட்டு போட்டு ஷேர் பண்ணிக்குங்க மக்களே!

    பண்ணை வீட்டில்

    பண்ணை வீட்டில்

    கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சந்தேகம்

    சந்தேகம்

    இதையடுத்து அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பிரேத பரிசோதனையில் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது.

    விஷம் கலந்து...

    விஷம் கலந்து...

    இதுகுறித்து மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறாக இருந்ததால் குழப்பம் நீடித்தது. அவர் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    இதனால் கலாபவன் மணியின் உறவினர்கள், சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

    அறிக்கை தாக்கல்

    அறிக்கை தாக்கல்

    கடந்த இரண்டு வருட விசாரணைக்குப் பின் தனது அறிக்கையை சிபிஐ கொச்சி நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அதில், கலாபவன் மணி கொலை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லீரல் பாதிப்பு

    கல்லீரல் பாதிப்பு

    மேலும் கல்லீரல் பாதிப்பால்தான் அவர் மரணமடைந்தார் என்று சிறப்பு மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டி சிபிஐ குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    There is no mystery in the death of actor Kalabhavan Mani, stated the probe report submitted by CBI. The report was filed based on the report from a medical board including noted doctors in the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X