உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்...முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : உதயநிதி ஸ்டாலினின் கலகத்தலைவன் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கலகத் தலைவன்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திருக்கும், இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

ஒரு தொழிற்சாலை சொந்தமாக புதுவகை கனரக வாகனத்தை உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது. ஆனால், அந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபாடு அதிகம் உருவாகும் என்பதால், அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதை தெரிந்து கொண்ட நிறுவனம், அந்த விஷயத்தை மறைக்க முயற்சி செய்கிறது. ஆனால் இந்த ரகசியம் வெளியில் தெரிந்து கனரக வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

அடுக்கடுக்கான திருப்பம்

அடுக்கடுக்கான திருப்பம்

இதனால் கடுப்பான நிறுவனம், ரகசியத்தை வெளியில் கசிய விட்டது யார்? என்பதை கண்டுபிடிக்கும் வேலையை ஆரவிடம் கொடுக்கிறது. உதயநிதி யார்? அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? அவருக்குப் பின்னால் இருப்பது யார்? என்ற அடுக்கடுக்கான திருப்பங்களுடன் கலகத் தலைவன் படத்தின் கதை நகர்கிறது.

அட்டகாசமான நடிப்பு

அட்டகாசமான நடிப்பு

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள நேர்த்தியான திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் உதயநிதியின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டி உள்ளனர். மேலும், ஆரவ்வின் நடிப்பு அனைவருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அதே போல நிதி அகர்வாலின் நடிப்பையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

திரில்லர், சஸ்பென்ஸ் படத்தின் கடைசி வரை கொண்டு வந்து படத்தை கனகச்சிதமாக இயக்கி இருக்கிறார் மகிழ் திருமேனி. நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 80 லட்சம் முதல் 1 கோடி வரை வசூலாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் வசூல் குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X