twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் நாளைவிட இரண்டாவது நாளில் கூடிய கலகத் தலைவன் வசூல்..எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்படப் பல திரைப்பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

    ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

    சிவ கார்த்திகேயன் என்னை சந்திப்பதற்கு பயந்தார்... உதயநிதி கூறிய சுவாரசிய தகவல்சிவ கார்த்திகேயன் என்னை சந்திப்பதற்கு பயந்தார்... உதயநிதி கூறிய சுவாரசிய தகவல்

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    பிஸியான அரசியல்வாதியும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த ஆர்டிகிள் 15 திரைப்படத்தை தமிழில் அருண் ராஜா காமராஜ் திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார். சாதி அடக்குமுறைக்கு எதிராக நடந்த கொடுமையை படம் அழகாக வெளிப்படுத்தி இருந்தது.

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

    இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படம் வெள்ளிக்கிழமை நவம்பர் 18ந் தேதி வெளியானது. வழக்கமான காலை காட்சிகளுடன் வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தால் படம் மாலை மற்றும் இரவு ஸ்பெஷல் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

    இரண்டாம் நாள் வசூல்

    இரண்டாம் நாள் வசூல்

    கலக தலைவன் திரைப்படம் முதல் நாளில் ரூ 2 முதல் 3 கோடி வரை வசூலான நிலையில், இரண்டாம் நாளான நேற்று ரூ1 கோடியை வசூலித்து இரண்டாம் நாள் முடிவில் ரூ.4 கோடியாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் மகிழ் திருமேனி

    இயக்குநர் மகிழ் திருமேனி

    இயக்குநர் மகிழ் திருமேனி ரசிகர்களை கவரும் வகையில் மீண்டும் ஒரு அற்புதமான த்ரில்லர் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தை இந்த கதாபாத்திரத்தில் ஆழகாக வெளிப்படுத்தி காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஈஸ்வர், பூமி படத்திற்கு பிறகு நடிகை நிதி அகர்வாலுக்கு கலகத் தலைவன் ஒரு நல்ல திரைப்படமாக அமைந்துள்ளது. பிக் பாஸ் ஆரவின் வில்லத்தனம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது என பலரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

    English summary
    politician and actor Udhayanidhi Stalin's Kalaga Thalaivan' hit the big screens yesterday.Kalaga Thalaivan Day 2 Box Office Collection
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X