Exclusive: "லேடி சூப்பர்ஸ்டார் பத்தி இப்டி பேசியது அநாகரீகம்".. ராதாரவி பேச்சுக்கு கலையரசன் கண்டனம்

நயன்தாரா பற்றிய ராதாரவி பேச்சுக்கு நடிகர் கலையரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actor Kalaiarasan Exclusive: ராதாரவி பேச்சுக்கு கலையரசன் கண்டனம்- வீடியோ

சென்னை: நயன்தாரா குறித்து ராதாரவி அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கலையரசன்.

கொலையுதிர்காலம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து தரக்குறைவாக பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராதாரவி. அவருக்கு எதிராக திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நயன் தாராவுடன் ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலையரசனை ஒன் இந்தியாவிற்காக சந்தித்தோம். அப்போது, ராதாரவி பேச்சுக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார் கலையரசன்.

லேடி சூப்பர்ஸ்டார்:

லேடி சூப்பர்ஸ்டார்:

மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் அவர், "தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா குறித்து ராதாரவி இப்படிப் பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. லேடி சூப்பர்ஸ்டார் என்ற இந்த உயரத்தை அடைய அவர் எவ்வளவு தடைகளை, வலிகளைக் கடந்திருப்பார்.

அநாகரீகம்:

அநாகரீகம்:

அதனை இப்படி அவதூறாகப் பேசுவது நிச்சயம் தவறு. அதுவும் பலர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணைப் பற்றி இப்படி பேசுவது அநாகரீகமானது. இது சரியல்ல.

வடசென்னை மக்கள்:

வடசென்னை மக்கள்:

அதோடு, அந்த நிகழ்ச்சியில் வடசென்னை மக்கள் பற்றியும் ராதாரவி மிகவும் மோசமாகப் பேசியுள்ளார். வடசென்னை மக்கள் என்றாலே கெட்ட கெட்ட வார்த்தைகளில் தான் பேசுவார்கள் என அவர் கூறியுள்ளார். நானும் வடசென்னை ஆள் தான். நிச்சயம் ராதாரவி கூறுவது போல் அங்குள்ளவர்கள் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

ஐரா:

ஐரா:

ஐரா படத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அதில், பவானி என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக, அமுதன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கலையரசன். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X