கலைஞரின் பயோபிக்.. உதயநிதி ஸ்டாலின் தான் தலைவரா?
சென்னை : டாக்டர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது பயோபிக் எனப்படும். அதில் அவர் செய்த சாதனைகள் மற்றும் பலவற்றை அப்படத்தில் குறிப்பிடுவார்கள். பயோபிக்கள் உண்மை தன்மை ஆராய்ந்து எடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பல பயோபிக் திரைப்படங்கள் வெளியாகின, அதில் பல படங்கள் வெற்றியும் பெற்றன பல படங்கள் தோல்வியும் அடைந்தன. தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் வெளிவந்தன.

என்.டி.ஆர்.பயோபிக்
தெலுங்கு திரையுலகில் இருந்து அறிமுகமாகி பின் நாளில் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பேற்றார். தெலுங்குத்துறையில் இவர் ஆற்றியப்பணிக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக கடந்த ஆண்டு ‘என்.டி.ஆர் காத்தநாயகுடு‘ என்ற பெயரில் வெளிவந்தது. இதில் என்.டி.ஆராக பாலகிருஷ்ணா நடித்து இருப்பார் இந்த படம் பெறும் வரவேற்பை பெற்றது.

ஜெயலலிதா பயோபிக்
இதேபோல தமிழில் கூட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலரும் தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் டீசர்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன.

கலைஞர் பயோபிக்
டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக ஒரு செய்தி உலா வருகிறது. அந்த படத்தில் கலைஞர் அவரின் பேரனான உதயநிதி ஸ்டாலினே நடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலரும் பல தலைவர்களின் கதையை எடுத்து வருகின்ற வேளையில் இச்செய்தி பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

இளைஞர்களுக்கு உதவும்
தங்கள் தலைவரை தப்பாக சித்தரித்ததாக மற்றும் அவர் பற்றி அவதூறு பரப்புவதாக பல பிரச்சினைகள் பல தரப்பட்ட நிலைகளில் இருந்து எழும். வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது பலருக்கு அவர்களை பற்றி தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











