கலைஞர் 100 விழா... வாங்க மன்மதராசானு கூப்டாரு.. நெகிழ்ந்த தனுஷ்!

சென்னை: கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசி உள்ளார். மேலும், எந்திரன் படத்தை அவருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தை ரசித்து ரசித்து பார்த்தார் அதைப்பார்த்து நானே வியந்துவிட்டேன் என்று கலைஞரை தனுஷ் புகழ்ந்து பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.

Kalaignar 100 event actor dhanush gives a brief speech about Kalaignar

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டட் த்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக கலைஞர் 100 விழா பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக்ஜம் புயல் கனமழையால் ஒத்திவைக்கப்பட்டது.

கலைஞர் 100 விழா: இதையடுத்து, கலைஞர் 100 விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,கமல்,சூர்யா, தனுஷ், கார்த்திக், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,பார்த்திபன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்கும் வகையில் எல்இடி திரையில் இந்த ஒளிபரப்பட்டு வருகிறது.

வாங்க மன்மதராஜா: இதில் பேசிய தனுஷ், கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. முதன் முதலில் ஒரு படத்தின் பூஜையின் போது அவரை சந்தித்தேன். அப்போது என்னை வாங்க மன்மதராஜா எனக் கூறி அழைத்தார். கலைஞர் மறைவைப்பற்றி பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. அதுவரை அவர் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். கலியன் பூங்குன்றனார் சொல்லி இருக்கிறார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார். அதே போல கலைஞர் அவர்கள் நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் என்று. அவர் சொன்ன கருணாநிதியின் வரிகள் படி நாமாக வாழ்வோம்.வாழ்க கலைஞர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X