"முரசொலி".. இதுதான் கருணாநிதி பயோ பிக்கா.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் கலைஞர் போல இருக்கும் புகைப்படம் ஆன்லைனில் படு வேகமாக பரவி வருகிறது.
பல பயோபிக்களை போல தற்போது மறைந்த டாக்டர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது.

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது பயோபிக் எனப்படும். அதில் அவர் செய்த சாதனைகள் மற்றும் பலவற்றை அப்படத்தில் குறிப்பிடுவார்கள். பயோபிக்கள் உண்மை தன்மை ஆராய்ந்து எடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பல பயோபிக் திரைப்படங்கள் வெளியாகின,
அதில் பல படங்கள் வெற்றியும் பெற்றன பல படங்கள் தோல்வியும் அடைந்தன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் வெளிவந்தன.

தெலுங்கு திரையுலகில் இருந்து அறிமுகமாகி பின் நாளில் அந்த மாநிலத்தையே ஆண்ட என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக வெளிவந்தன. மேலும் மும்பையின் பெரிய டான் ஆக கருதப்படும் பால் தாக்ரே அவரின் பயோபிக் வெளிவந்தது. தமிழில் கூட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலரும் தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இப்படி எடுக்கப்படும் படங்கள் சர்ச்சையில் சிக்குகிறது. தங்கள் தலைவரை தப்பாக சித்தரித்ததாகவும், அவதூறு பரப்புவதாகவும் கூறி பல திசைகளில் இருந்தும் பிரச்சினைகள் எழும். பயோபிக் எடுப்பது பலருக்கு அவர்களை பற்றி தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

டாக்டர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாகவும் அதில் அவரின் பேரனான உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலரும் பல தலைவர்களின் கதையை படமாக எடுத்து வரும் வேலையில் இச்செய்தி பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தா கலைஞர் போல இருக்கும் ஒரு புகைப்படம் ஆன்லைனில் படு வேகமாக வைரலாகி வருகிறது. அதில் படத்தின் பெயர் முரசொலி என்று குறிப்பிட்டுள்ளது, மேலும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











