அரண்மனை- 3 சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

சென்னை : நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அரண்மனை-3 ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காமெடி கலந்த ஹாரர் ஜானரில் உருவாகி உள்ளது.

குஷ்புவின் அவ்னி மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது.

காமெடிக்கு கியாரண்டி

காமெடிக்கு கியாரண்டி

சாதாரணமாகவே இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அள்ளும். இவரது திரைப்படங்கள் என்றாலே 100% காமெடிக்கு கியாரண்டி என சொல்லும் அளவிற்கு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் காமெடி ஃபார்முலாவில் இருந்து சற்று விலகி இப்பொழுது ஹாரர் படங்களை இயக்கி வருகிறார்.

ஹாரர் கதை களத்தில்

ஹாரர் கதை களத்தில்

அந்த வகையில் முதல் முறையாக ஹாரர் கதை களத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் பெற்ற வரவேற்பு அடுத்த பாகத்தை இயக்க தூண்டியது. எனவே அரண்மனை பாகம் இரண்டையும் சுந்தர் சி இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்

ஆர்யாவுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்

அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களில் தொடர்ச்சியாக இப்போது மூன்றாவது பாகம் உருவாகி உள்ளது. அரண்மனை 3ல் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்து இருக்க மூன்று கதாநாயகிகள் இதில் நடித்துள்ளனர். ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால்,ஆண்ட்ரியா என முன்னணி கதாநாயகிகள் இதில் நடித்திருக்க காமெடிக்கு சற்றும் பஞ்சமில்லாமல் யோகி பாபு, நளினி, மனோபாலா,விவேக், மைனா நந்தினி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். குஷ்புவின் அவ்னி மூவிஸ் இப்படத்தை தயாரிக்க, சத்யா சி இசையமைத்து உள்ளார்.

அரண்மனை 3 சாட்டிலைட் உரிமை

அரண்மனை 3 சாட்டிலைட் உரிமை

சமீபத்தில் அரண்மனை 3 டிரைலர் வெளியாகி சக்கைப்போடு போட்டது இந்த நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் அரண்மனை 3 சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. காதல் காமெடி திகில் கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி என பக்கா கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருக்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இப்படத்தை திரையில் காண காத்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X