For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கலைஞர் விருது கிடைத்தது என் பிறவிப் பயன்... நடிகர் குமரிமுத்து பெருமிதம்

  |

  சென்னை: எந்த பலனையும் எதிர்பார்க்காமல் 25 ஆண்டுகளாக திமுகவுக்காக முழங்கிக் கொண்டிருக்கிறேன்: எனக்கு 'கலைஞர் விருது' வழங்கப் பட்டதை பிறவிப் பயனாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் குமரிமுத்து.

  ஆண்டுதோறும் தந்தை பெரியாரின் பிறந்தநாள், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தி.மு.க.வின் பிறந்தநாள் என 3 விழாக்களையும் சேர்த்து முப்பெரும் விழாவாக தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

  Kalaingar award is a reward : Kumari Muthu

  அதன்படி, நேற்று முன்தினம் மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பெங்களூரைச் சேர்ந்த வி.டி.சண்முகத்திற்கு பெரியார் விருதையும், முனவர் ஜானுக்கு அண்ணா விருதையும், புதுக்கோட்டை விஜயாவுக்கு பாவேந்தர் விருதையும், நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருதையும் வழங்கி கவுரவித்தார்.

  கலைஞர் விருது பெற்றது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு நடிகர் குமரிமுத்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  என் முதல் படம்...

  1954-ல் எனது 16 வயதில் கலைத்துறைக்கு வந்தேன். தொடக்கத்தில் ஆறாண்டுகள் எம்.ஆர்.ராதா அண்ணனின் நாடக கம்பெனியில் இருந்தேன். 1968-ல் நாகேஷ் அண்ணனுடன் நடித்த ‘பொய் சொல்லாதே' படம்தான் எனது முதல் படம்.

  இப்ப அழகாயிட்டேன்...

  அப்ப முகமெல்லாம் டொக்கு விழுந்து ஆக்ஸிடென்ட் ஆன அம்பாசிடர் கார் மாதிரி இருப்பேன். அதுக்காக இன்னைக்கி அழகுன்னு சொல்லல. இப்ப சினிமா வசதிகள் வந்துட்டதால கொஞ்சம் மோல்டாகி, அப்ப இருந்ததைவிட கொஞ்சம் அழகா இருக்கேன்னு சொல்றேன்.

  புது வாழ்வு...

  எனது சினிமா குரு டைரக்டர் மகேந்திரன் சார்தான். அவர் இயக்கிய எட்டுப் படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு பிறகு பாக்யராஜ் ஐயா ‘இது நம்ம ஆளு' படத்தின் மூலம் எனக்கு புதுவாழ்வு கொடுத்தார்.

  திமுகவின் நேரடித் தொடர்பு...

  அண்ணாவின் பேச்சாற்றலைப் பார்த்து திமுக அனுதாபி ஆனேன். 21 வயதிலிருந்து திமுக அனுதாபியாக இருந்தாலும் கட்சிக்கும் எனக்குமான நேரடித் தொடர்பு 1989-ல் இருந்துதான்.

  25 ஆண்டுகளாக...

  அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு என்னைக் கேட்காமலேயே என் பெயரை அறிவித்தார் கலைஞர். அப்போதிருந்து 25 ஆண்டுகளாக எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் திமுகவுக்காக முழங்கிக் கொண்டிருக்கிறேன்.

  சிறுவனைப் போல்....

  76 வயதில் எனக்கு கலைஞர் பெயரில் விருது என்றபோது சிறுவனைப்போல துள்ளிக் குதித்தேன். கலைஞரின் இலக்கியத்தில், தமிழில் மயங்கியவன் நான்.

  பிறவிப் பயன்...

  அரசியலாக பார்க்காமல் தனி மனிதராக பார்த்தால் அவரைப் போல் ஒரு மாமேதையை இனி பார்க்க முடியாது. அவர் பெயரில் விருது கிடைத்ததை பிறவிப் பயனாக கருதுகிறேன்.

  அரசியலில் நடிகர்கள்...

  இன்றைக்கு எத்தனையோ நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்றைக்கு ஒரு இடம் நாளைக்கு ஒரு இடம் என மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

  நான் அப்படியில்லை...

  அது அவர்களின் சுபாவம். ஆனால், குமரிமுத்து அப்படி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒருவரை வாழ்க என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு எத்தனை மனக்கசப்புகள் வந்தாலும் அவரை ஒழிக என்று சொல்ல மாட்டேன். அப்படியொரு சூழல் வந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  English summary
  The comedy actor Kumari Muthu after receiving award from Karunanidhi has said that the award he received is a reward to him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X