கலைஞர் டிவி விஜே அடிச்சிடுச்சு லக்கு!

சென்னை : கலைஞர் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் தணிகை, அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு தயாரித்து இயக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை குயின்ஸ்லி.

பல படங்களுக்கு துணை மற்றும் இயக்குனராகவும், பல குறும் படங்களையும் இயக்கியுள்ள நியூட்டன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

Kalaingar TV VJ Thanigai turns to be a busy actor

இப்படம் ஒரு ரொமான்டிக் சைக்கோ திரில்லர் திரைப்படத்தின் வகையை சார்ந்ததாக இருக்க போகிறது.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் விஜய் தொலைக்காட்சி புகழ் பாண்டி கமல். இவர்களுடன் பல பிரபலமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

பெயரிடப்படாத இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை இசையமைக்க உள்ளார் சித்தார்த்தா பிரதீப் . மலையாள திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இந்த திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி ஜே தணிகை இதற்கு முன்னரே 'தடம்' மற்றும் 'குற்றம் 23' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான்.

நியூட்டன் பிரபு படங்களை இயக்குவதற்கு முன்னர் பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றினில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்துள்ளார். இப்படி தனது முந்தய அனுபவங்கள் மூலமும் நண்பர்களுடன் ஒன்று இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

படத்தின் பூஜை நிகழ்வு சமீபத்தில் வளசரவாக்கத்தில் உள்ள சாய் பாபா கோவிலில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த ரோபோ ஷங்கர், ஜாக்குவார் தங்கம், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

தற்போது தணிகை இப்படத்தினை தொடர்ந்து 'தொடுப்பி ' எனும் படத்தில் ஹீரோவாக' நடித்துவருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதையே மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை தூண்டி விட்டுள்ளது. திரில்லர் திரைப்படம் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

More from Filmibeat

Read more about: vj tv anchor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X