Max Blue Sattai Maran Review: மேக்ஸ் படம் எப்படி இருக்கு? தேறுமா.. தேறாதா.. ப்ளூ சட்டை மாறன் பளீச்!

சென்னை: விஜய் கார்த்திகேய இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்து நேற்று அதாவது டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் மேக்ஸ். இந்தப் படத்தினை கலைப்புலி எஸ். தாணு மற்றும் கிச்சா சுதீப் என இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். நேரடி கன்னடப் படமான இந்தப் படத்தினை தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்துள்ளனர். படத்தில் கிச்சா சுதீப்புடன் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேகர் சந்திரா படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதையைப் பற்றிப் பார்த்தால், ஆளுங்கட்சி மந்திரிகள் இருவர், ஆட்சியை தாங்கள் கைப்பற்றவேண்டும் என்பதற்காக இப்போது உள்ள ஆட்சியைக் கலைத்துவிட்டு, எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு உள்ளார்கள். ஒத்துழைப்பு தராத எம்.எல். ஏக்களை கொலை செய்யவும் தயங்காமல் உள்ளார்கள்.

kalaipuli s thanu blue sattai maran kichcha sudeepa

இப்படியான சூழலில் நேர்மையான காவல் அதிகாரியான சுதீப்பை அறிமுகப்படுத்துகின்றார்கள். பெண் காவலர்களை மந்திரிகளின் மகன்கள் அவமானப்படுத்த கதாநாயகன் ஆக்‌ஷனில் களமிறங்குகின்றார். இருவரையும் பிடித்து லாக் அப்பில் போட்டு, வழக்கு போடுகின்றார். இதைத் தெரிந்து கொண்ட மந்திரிகளின் ஆட்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றார்கள். அந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கின்றது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.

முதல் பாதி: படத்தின் முதல் பாதி சிறப்பாகவே இருந்தது. படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமாதமாக இருந்தது. முதல் பாதி சிறப்பாக இருந்தது என்றால், இரண்டாம் பாதியில் எதாவது சொதப்பிவிடுவார்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன். இரண்டாம் பாதியில் கொஞ்சம் எல்லாமே ஓவராகத்தான் இருந்தது. ஆனால் அது போர் அடிக்கவில்லை, படத்தின் தொய்வு எனவும் கூறமுடியாது.

kalaipuli s thanu blue sattai maran kichcha sudeepa

கைதி பட காட்சிகள்: படத்தை ஒரு இடத்தில் ஆரம்பித்து ஒரு இடத்தில் சரியாக முடித்துவிட்டார்கள். பரவாயில்லை. இவர்கள் எடுக்கும் படங்களில் இந்தப் படம் எவ்வளவோ மேல். அதேநேரத்தில் கைதி படத்தில் உள்ள பல காட்சிகள் இந்தப் படத்திலும் இருந்ததால், கைதி படத்தைப் பார்ப்பதைப் போலவும் தெரிந்தது. படத்தின் ஒன் லைன் தான் கைதி படத்தைப் போல் உள்ளது. ஆனால், இந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் வேறு என்பதால் படம் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. படத்தில் கதாநாயகி இல்லை. கதாநாயகி இல்லாததால் படத்தில் பாடல்கள் இல்லை. படம் சிறப்பாக இருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நடிப்பு: வழக்கமான கதைதான் என்றாலும் படத்தில் வைக்கப்பட்டுள்ள டிவிஸ்ட் அண்ட் டர்ன் படத்தை ரசிக்க வைக்கின்றது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் சுதீப்தான் வருகின்றார். ஆனால் அவர் சிறப்பாக நடித்து சலிப்புத் தட்டாத நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சிறப்பாகவே உள்ளது. நான் பார்க்கும் படம் லாஜிக் மீறல் இருக்ககூடாது என நினைக்கும் ரசிகர்களுக்கான படம் இது கிடையாது. அதேநேரத்தில் லாஜிக் மீறல் பற்றியெல்லாம் கவலை இல்லை, படம் என்னை எண்டர்டைண் செய்யவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் படம் சரியான படம். நல்ல ஆக்‌ஷன் த்ரில்லர் எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்" எனக் கூறியுள்ளார்.

kalaipuli s thanu blue sattai maran kichcha sudeepa

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X